அஜித்துக்கு சிவா என்றால் விஜய்க்கு அட்லி! நான்காவது முறையாக இணையும் காம்போ!!

நடிகர் அஜித் இயக்குனர் சிவா உடன் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களில் தொடர்ந்து நடித்தார். இதுவரை எந்த நடிகரும் ஒரே இயக்குனரின் இயக்கத்தில் இத்தனை படங்களில் நடிக்கவில்லை. தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தை போலவே தற்போது நடிகர் விஜய்யும் ஒரே இயக்குனருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களில் இயக்குனர் அட்லியுடன் இணைந்து பணியாற்றிய விஜய் தற்போது நான்காவது முறையாக மீண்டும் அட்லியுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

2023ஆம் ஆண்டு தொடங்க உள்ள இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். தற்போது அட்லி பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில் பிசியாக இருக்கிறார். அதேபோல் நடிகர் விஜய்யும் பீஸ்ட், தளபதி 66, தளபதி 67 என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி உள்ளார்.

எனவே இருவரும் அவரவர் படங்களை முடித்த பின்னர் விஜய்யின் 68வது படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளியான படங்கள் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும், வியாபார ரீதியாக படம் நல்ல வெற்றி பெற்றது.

வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

அதேபோல் என்னதான் அட்லி காப்பி அடித்து படம் எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் அவரின் படங்கள் வெற்றி பெற்று விடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதனால் தான் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த முறை அட்லி விஜய் இணையும் படத்திற்கு என்ன பஞ்சாயத்து வரப்போகிறது என்று தெரியவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.