கமல் கதையில் நடிக்கும் விக்ரம்! வேற லெவல் கூட்டணி!!

கோலிவுட்டில் நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகர் என்றால் அது விக்ரம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இருப்பினும் இவரின் கைவசம் படங்கள் உள்ளது. சில காரணங்களால் படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாம்.

தற்போது விக்ரம் மகான், கோப்ரா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விக்ரம் உலக நாயகன் கமல்ஹாசன் படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஆம் கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கமல் கதை எழுதி அவரது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இப்படத்தில் தான் நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

அஜித்துக்கு சிவா என்றால் விஜய்க்கு அட்லி! நான்காவது முறையாக இணையும் காம்போ!!

மகேஷ் இயக்கும் இந்த விக்ரம் தவிர நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கமல் கேமியோ போன்ற சிறு கேரக்டரில் தான் நடிக்க உள்ளாராம். விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியை சுற்றி தான் முழு படத்தின் கதையும் நகர்கிறதாம்.

வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

இவர்கள் மூவரின் நடிப்பு திறமையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு இவர்களின் நடிப்பு பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் மூவரும் ஒரே படத்தில் இணைய உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.