கலீஜான இடம்னு தெரிஞ்சும் மனுஷன் என்ன செய்தார் தெரியுமா? ரஜினி பற்றி ஷங்கர் சொன்ன சீக்ரெட்!

Rajini Shankar: தமிழ் திரையுலகில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாராக அளவில் மிகப்பெரிய புகழைப் பெற்ற நடிகராக இருந்து வருகிறார். இத்தனை புகழை கொண்ட ரஜினி எந்தவொரு தலக்கணமும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகவும் மிக எளிமையாகவும் பழக கூடியவர். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.

வருடத்திற்கு ஒரு முறையாவது இமயமலை சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுதான் வருவார். அதுமட்டுமில்லாமல் விழா மேடையிலும் தேவைப்பட்டால் ஆன்மீக சொற்பழிவும் ஆற்றுவார். தனக்கு அடுத்த இளைய தலைமுறையினருக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்குவார். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள், சம்பவங்களை வைத்து இளசுகளுக்கு அறிவுரைகளை வழங்குவார்.

திரையுலகில் அவருக்கு என தனி மரியாதையே இருந்து வருகிறது. ரசிகர்களையும் தாண்டி திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் ரஜினி குறித்து ஒரு சம்பவத்தை ஒரு பேட்டியின் போது கூறியிருக்கிறார். அதாவது ஷூட்டிங்கை பொறுத்தவரைக்கும் ரஜினி நேரத்தை விரயமாக்க மாட்டார். 5 நிமிடம் தானே என அசால்ட்டாக இருக்க மாட்டார்.

மற்ற ஒரு சில நடிகர்கள் அசிஸ்டெண்ட் போய் அழைத்தாலும் வர மாட்டார்கள். ஆனால் நான் ஆர்ட்டிஸ்ட்டை வர சொல் என்று சொன்னதும் அந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்து விடுவார் ரஜினி. மேலும் ஒரு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் புனே ரயில்வே டிராக்கில் வைத்து காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். ஏகப்பட்ட செலவுகளுடன் அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தேன். மதிய உணவு இடைவெளி 30 நிமிடம் என சொன்னதும் அனைவரும் சாப்பிட கேரவனுக்கு போய்விட்டார்கள்.

ஆனால் ரஜினி ரயில் போகாத டிராக் இடைவெளியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுவும் அந்த இடம் ஒரே கலீஜாக இருந்தது. அந்த இடத்திற்கும் கேரவனுக்கும் இடையேயான தொலைவு 20 நிமிடம் ஆகும் என்பதால் போயிட்டு வர தாமதமாகும் என நினைத்து இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டார். இதை ஒரு பேட்டியின் போது ஷங்கர் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...