5 நிமிஷம் சிங்கிள் டேக் ஷாட்!.. 15 நாளா டென்ஷன்.. பிபி எகிறிடிச்சி.. ரத்னம் இயக்குநர் ஹரி வெறித்தனம்!

ஒரு படம் சற்று சுமாரா இருந்தாலும் நல்லா இல்லை என ரசிகர்கள் சொல்லிவிட்டு அந்த படத்தை பார்ப்பதை தவிர்த்து விடுகின்றனர். ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் படம் சுத்த வேஸ்ட் உங்க காசை சேமித்துக் கொள்ளுங்கள் என்கிற அளவுக்கு விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

5 நிமிட சிங்கிள் டேக் ஆக்‌ஷன் சீன்:

ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் பல ஸ்டண்ட் மேன்கள் உயிரைக் கொடுத்து வேலை பார்த்து வருகின்றனர். ஹீரோ, இயக்குனர், சண்டைப் பயிற்சி இயக்குனர், இசையமைப்பாளர், ஹீரோயின் மற்றும் சக நடிகர்கள் என பலரும் ஒரு படத்துக்காக பல நாட்கள் தூக்கத்தை இழந்து நடித்து வருகின்றனர். எப்படியாவது இந்த படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி விட வேண்டும் போட்ட காசை திருப்பி எடுக்க என்கிற எண்ணத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

சாமி ஸ்கொயர் தோல்விக்கு பிறகு யானை படத்தை இயக்கினார் ஹரி. அந்த படம் சுமாராக ஓடிய நிலையில், பழைய பன்னீர்செல்வம் ஆக வர வேண்டும் என்கிற வெறியில் விஷாலை வைத்து ரத்தினம் படத்தை உருவாக்கியுள்ளார்.

மிரட்டிய இயக்குநர் ஹரி:

இந்த படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்கிற முடிவுடன் பல வேலைகளை அந்த படத்தில் பார்த்திருப்பதாக இயக்குனர் ஹரி ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வருகிறார். இந்நிலையில், ரத்னம் படத்துக்காக ஐந்து நிமிடக் காட்சிகள் சிங்கிள் டேக் காக படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த ஒரு காட்சியை பார்க்கவே ரசிகர்கள் தாராளமாக தியேட்டருக்கு வரலாம் எனக் கூறும் அளவுக்கு அந்த காட்சி மிரட்டுகிறது. சிங்கிள் டேக் காட்சி என்றதும் செட்டுக்குள் எல்லாம் எடுக்காமல் திருப்பதியில் உள்ள நான்கு வழி சாலை ஒன்றில் நான்கு நாட்கள் சுமார் 80 நடிகர்களுடன் அந்தக் காட்சியை சிங்கிள் டைட்டில் படமாக்கி காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரி.

கனல் கண்ணன் மாஸ்டர் அந்த காட்சியை படமாக்க உதவியுள்ளார். இல்லனா சேசிங் சீன் மற்றும் ஹீரோ ஹீரோயினி காப்பாற்றிக் கொண்டு ஜீப்பில் செல்ல, அடியாட்கள் அவர்கள் இருவரையும் கொல்ல துரத்திக் கொண்டு வர அவர்களுடன் விஷால் சண்டை போடுவது, அவர்கள் வந்த வாகனங்களை பறக்க விடுவதென பெரிய ஆக்ஷன் பிளாக் காட்சியை இயக்குனர் அடி சிங்கிள் டெக்கில் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். நாளை ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாக உள்ள ரத்னம் படத்துக்கு ஏகப்பட்ட தடைகள் உருவாகும் நிலையும் உள்ளதாக விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், ரத்னம் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...