11 வருஷம் ஆயிடுச்சு.. கெயிலுக்கு பிறகு ஆர்சிபி அணிக்காக ராஜத் படிதார் செஞ்ச மேஜிக்..

நடப்பு தொடரில் ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த சீசனுக்கு முன்பாக அந்த அணியன் பந்துவீச்சு தான் பெரிய பலவீனமாக கருதப்பட்டு வந்த நிலையில் சில போட்டிகளில் பேட்டிங்கும் பெரிதாக எடுபடாமல் போனது. சிறந்ததொரு வீரர்களைக் கொண்ட அணியாக ஆர்சிபி அமைந்த போதிலும் அவர்களால் ஐபிஎல் கோப்பையை இதுவரை ஒரு முறை கூட தொட்டு பார்க்க முடியவில்லை.

அதனை இந்த சீசனிலாவது நிகழ்த்திக் காட்டுவார்கள் என எதிர்பார்த்தால் அவர்களது ஆட்டம் மிக மோசமாக இருப்பதுடன் மட்டும் இல்லாமல் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியுடன் ஆறு போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் முன்னேறுவது சற்று நெருக்கடியான ஒரு சூழலில் தான் உள்ளது.

மற்ற அணிகளின் வெற்றிகளை பொருத்தும் அவர்களது வாய்ப்பு அமையும் என்பதால் இந்த லீக் சுற்று முடியும் வரை ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பிற்கு காத்திருக்க வேண்டிய நிலை தான் உள்ளது. ஆனால் அதே வேளையில் ஆறு போட்டியிலும் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 43 பந்துகளில் நான்கு ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்திருந்தார். அவருடன் இணைந்து அதிரடியாக ரன் சேர்த்த ராஜத் படிதர், 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதில் மார்க்கண்டே ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை அவர் பறக்க விட்டிருந்தது, ஆர்சிபி ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது.

இறுதிக்கட்டத்தில் கேமரூன் க்ரீனும் நல்லதொரு பங்களிப்பை அளித்ததால் அந்த அணியின் ரன்னும் 200-ஐ கடந்திருந்தது. இந்த நிலையில் தான் இளம் வீரர் ராஜத் படிதர் மிக முக்கியமான ஒரு சாதனையை தனது அணிக்காக செய்து காட்டியுள்ளார். கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் ஆடிய கிரிஸ் கெயில் 17 பந்துகளில் அரைச் சதம் அடித்திருந்தார். அது தான் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி வீரர் ஒருவர் 20 பந்துகளுக்கும் குறைவாக கடைசியாக அடித்திருந்த அரைசதமாக இருந்தது.

அப்படி நடந்து 11 ஆண்கள் ஆண்டுகள் கழித்து ஆர்சிபி அணி வீரர் ஒருவர் 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு அரை சதத்தை அடித்துள்ளார் என்ற பெருமையை தான் தற்போது ராஜத் படிதர் பெற்றுள்ளார். இதற்கிடையில், ஆர்சிபி அணியில் தினேஷ் கார்த்திக், விராட் கோலி, பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் அப்படி செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...