2வது காதலரையும் பிரிந்து விட்டாரா கமல்ஹாசன் மகள்?.. ஸ்ருதிஹாசன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது பாய் ஃப்ரெண்ட் சாந்தனு ஹசாரிகாவை பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் சோசியல் மீடியாவை உலுக்கி வருகின்றன. நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் நடிகைகளாக நடித்து வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் பிரேக்கப்:

இரண்டாம் மகள் அக்ஷரா ஹாசன் பற்றி இதுவரை எந்த ஒரு கிசுகிசுவும் அவரது காதலர் குறித்து எந்த ஒரு தகவலும் கூட வெளியாகவில்லை. ஆனால் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை காதலித்து வந்ததை ஊர் முழுக்க வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார். பின்னர் அவரை பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் மும்பையைச் சேர்ந்த டூடில் ஆர்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரே வெளியிட்டு இருந்தார். கொரோனா லாக் டவுனில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

Inimel

காதலரை அன்ஃபாலோ செய்தார்:

தனது தந்தை கமல்ஹாசனிடம் இரண்டாவது காதலர் சாந்தனு ஹசாரிகாவை அறிமுகம் செய்து வைத்திருந்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், திடீரென தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாந்தனு ஹசாரிகாவை நடிகை ஸ்ருதிஹாசன் அன்ஃபாலோ செய்து விட்டார் என்றும் அவரது போட்டோக்களை நீக்கி விட்டார் என்றும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாக வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜுடன் இணைந்து செம க்ளோஸாக அவர் ரொமான்ஸ் செய்து நடித்த இனிமேல் ஆல்பம் பாட ல் வெளியானது.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கூலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஸ்ருதிஹாசன் சாந்தனுவை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்ருதிஹாசன் அல்லது சாந்தனு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...