விஜயை வச்சு பந்தயத்துக்கு தயார்.. பக்கா ப்ளானோடு களமிறங்கும் தளபதி 69!

Actor Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய படங்களுக்கு என ஒரு நல்ல ஓப்பனிங் இருந்து வருகிறது. விஜயின் படங்கள் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்தான். தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜயின் சம்பளம் அவருடைய முந்தைய படங்களின் வெற்றியால்தான் தீர்மானிக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு விஜயின் 69வது படத்தை இயக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. கடைசியாக தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதற்கு இடையில் தளபதி 69 படத்தை லலித் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க போவதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அவர்கள் தயாரிக்க போவது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஜெகதீஷின் நண்பரான பேஷன் ஸ்டூடியோ சுதன் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் ஒரு செய்தி வெளியானது. எப்பவுமே லலித் ஜெகதீஷ் இணைந்து படத்தை தயாரிக்கும் போது அந்த படத்தில் இருந்து வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைத்தான் ஜெகதீஷிடம் தருவாராம் லலித்.

ஆனால் தளபதி 69 படத்தை பொறுத்தவரைக்கும் சுதன் தயாரிக்கும் பட்சத்தில் படத்தில் வரும் லாபத்தில் பாதிக்கு பாதி ஷேர் செய்து கொள்ளலாம் என ஜெகதீஷிடம் சொன்னதாகவும் அதனால் ஜெகதீஷுடன் இணைந்து தளபதி 69 படத்தை தயாரிக்கலாம் என சுதன் சொன்னதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கோட் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் விஜயின் தளபதி 69 படத்தை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரு செய்தி கசிந்து வருகிறது.

ஆக விஜயை வைத்து இந்த மூன்று தயாரிப்பு நிறுவனங்களும் பந்தயத்தில் குதித்து விட்டனர். யார் இந்தப் பந்தயத்தில் ஜெயிக்க இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...