வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

கோலிவுட்டில் தற்போது யாராலும் தொட முடியாத ஒரு உச்ச நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் எனும் அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி உள்ளது. அதிலும் சமீபகாலமாக இவரது படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் அட்லி மற்றும் வெற்றி மாறன் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துள்ளாத மனமும் துள்ளும் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான இப்படம் அந்த சமயத்தில் விஜய்க்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இயக்குனர் எழில் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் வெளியான இப்படம் யாரும் எதிர்பாராத வகையில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலு என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆமாங்க துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் வடிவேலு தானாம். ஆனால் வடிவேலுவை வைத்து இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வராத காரணத்தினால், இதை ஒரு ஹீரோ சப்ஜெக்ட் படமாக மாற்றி தளபதி விஜய்யை நடிக்க வைத்தார்களாம். இந்த தகவலை படத்தின் இயக்குனர் எழில் ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment