நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் தயாராகி வரும் சூழலில், இன்னும் ஒரு திரைப்படத்துடன் நடிப்பு பயணத்திற்கு முழுக்கு போட உள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், கோட் தவிர இன்னும் ஒரு படம் நடித்த பின்னர், சினிமா பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி போட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும், சமீப காலமாக தமிழக் வெற்றிக் கழகம் கட்சி மூலம் நிறைய நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். விஜய் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழலில், அவரது படங்கள் இன்னும் இரண்டு தான் வெளிவரும் என்பது ரசிகர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.
இதனால், கோட் தவிர இன்னொரு படம் என இரண்டையும் பெரிதாக கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்பதிலும் ரசிகர்கள் மும்முரமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் கோட் திரைப்படம், இன்னும் சரியாக ஒரு மாதத்தில் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, லைலா, ஸ்னேகா, யோகி பாபு, பிரசாந்த், பிரபு தேவா, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதனிடையே, கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ள சூழலில், இதற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியான ‘ஸ்பார்க்’ என்ற பாடலை கேட்டு ரசிகர்களே நொந்து போயுள்ள நிலையில், திரைப்படமும் இப்படியே இருந்தால் என்ன ஆவது என்றும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், யுவன் இனிமேல் பாடல்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும், படத்தை பார்த்தாலே போதும் என்றும் ஏக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். கோட் படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 19 வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பாடல்களை போல இல்லாமல், ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியே தீர வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில், கோட் படத்திற்கு பிறகு விஜய்யின் கடைசி திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தில் இணைந்துள்ள நடிகை குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

ப்ரேமலு என்ற மலையாள படத்தின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களையும் கட்டி இழுத்தவர் தான் மமிதா பைஜூ. தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ரிபெல் படத்தில் நடித்திருந்த மமிதா பைஜூ, வேறு சில தமிழ் படங்களில் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில், விஜய் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவர் சூர்யா – பாலா கூட்டணியில் ஷூட்டிங்குடன் கைவிடப்பட்ட வணங்கான் திரைப்படத்திலும் நாயகியாக மமிதா பைஜூ நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

