நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிதற்க்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒய்.ஜி. மகேந்திரன் அது குறித்து தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தளபதி விஜய் அரசியலுக்கு வருவார் என பல நாட்களாக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சென்ற வாரம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவிட்திருந்தார். மேலும் தற்போது வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் 2026அம் ஆண்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய்க்கு ஒய்.ஜி. மகேந்திரன் பாராட்டு:
அதை தொடர்ந்து தற்போது நடித்து கொண்டிருக்கும் கோட் படத்தை முடித்ததற்கு பின்னர் தளபதி 69 படத்தையும் முடித்து விட்டு திரைத்துறையை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். எனவே ரசிகர்கள் இனி தளபதியை ஸ்க்ரினில் பார்க்க முடியாது என்பதை நினைத்து வருந்துகின்றனர்.
மேலும் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதற்கு பல திரைதுறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வேட்டையன் படப்பிடிப்பிற்கு விமான நிலையம் செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய்க்கு வாழ்த்துக்கள் என கூறினார். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் டோலிவுட்டில் முன்னனி நடிகரான ராம் சரண் மனைவியும் தனது வாழ்த்துகளை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
காசுக்கு ஆசைப்படல:
அதை தொடர்ந்து, ஒய்.ஜி. மகேந்திரன், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய நினைக்கும் மனிதன் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். விஜய் சினிமாவில் மார்க்கெட் போனதுக்கு பிறகு, அரசியலுக்கு வரவில்லை திரைத்துறையின் உச்சத்தில் இருக்கும் போதே வந்திருக்காருன்னா அவருக்கு அரசியலில் பணம் சம்பாதிப்பது நோக்கம் இல்லை. மக்களை சம்பாதிப்பது தான் அவரது நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.
கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஜெய்த்தும் காட்டியுள்ளனர். அதோடு விஜய் சினிமாவில் மார்க்கெட் இழந்த பின் அரசியலுக்கு வரவில்லை திரைதுறையிலேயே முன்னணி நடிகராக கோடி கணக்கில் சம்பளம் வாங்கிக் கோண்டு இருக்கும் போது தான் வந்துள்ளார். எனவே அவர் அரசிலுக்கு வந்ததின் நோக்கம் முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே பணம் சம்பாதிப்பதற்காக இருக்காது.
மேலும், அவர் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாக கூறியுள்ளார். மூத்த நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்த பிறகு நடிப்பதை நிறுத்தியது போல் இவரும் சினிமாவில் இருந்து விலகுகிறார் . அவர் மக்கள் சேவையை முழு ஈடுபாட்டுடன் செய்ய போகிறார். எனவே, விஜய் அரசியலுக்கு வருவதை தான் வரவேற்பதாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.