சீனாவில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ், இந்த அளவு உலக அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆமாங்க, லேசாக வூகான் முழுவதும் பரவிய வைரஸ் இவ்வாறு மக்களின் இயல்பு வாழ்க்கையினை முடக்கிப் போடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து, இந்தியா எனப் பல நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றன.
உலக அளவில் ஏறக்குறைய 5 மாதங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலேயே மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. பொருளாதார வீழ்ச்சியினைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாடும் ஊரடங்கினைத் தளர்த்தி வருகின்றது.
அந்தவகையில் படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, நிச்சயம் கொரோனா குறித்த திரைப்படங்களை பல மொழிகளில் நாம் பார்க்க முடியும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, தான் கொரோனா வைரஸ் என்ற பெயரில் முழு நீள படத்தினை இயக்கியுள்ளதாகவும், அப்படம் முழுவதும் இந்த லாக்டவுனுக்கு இடையில் எடுக்கப்பட்டதாவும் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி சிறப்பான வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.