பெரியார் பிரச்சனையால் ரஜினி படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்குமா சன்பிக்சர்ஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியாரை அவமரியாதையாக பேசியதாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கி எழுந்து உள்ளனர். இந்த நிலையில் குறிப்பாக திராவிடர் கழகத்தினர் மற்றும் திமுகவினர் ரஜினியை கடுமையான விமர்சனம் செய்து…


76bdc28d1120535724b07a399cb75468

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியாரை அவமரியாதையாக பேசியதாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கி எழுந்து உள்ளனர். இந்த நிலையில் குறிப்பாக திராவிடர் கழகத்தினர் மற்றும் திமுகவினர் ரஜினியை கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடியாக ரஜினியை விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ’தலைவர் 168’ என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தாங்கள் பெரிதும் மதிக்கும் பெரியாரை இழிவு படுத்திய ரஜினியை வைத்து இனி படம் தயாரிக்க மாட்டோம் என்ற முடிவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து ‘தலைவர் 168’ படத்தை கைவிட தயாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிலும் கொள்கையும் வேறு வேறு என்ற அடிப்படையில் ரஜினியின் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து தயாரிக்குமா? அல்லது தாங்கள் பெரிதும் மதிக்கும் பெரியாரை இழிவு படுத்திய ரஜினியை வைத்து இனி படம் தயாரிக்க மாட்டோம் என்ற முடிவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன