தல அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்த உடன் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. அதேபோல் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு பின்னர் பிரசன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் பிரசன்னா வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்
இருப்பினும் அஜித்துடன் எதிர்காலத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை நிச்சயம் மிஸ் செய்ய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது