தன்னுடைய பிறந்தநாள் அன்று கணவனிடம் பார்ட்டி வைக்க மனைவி கூறியதாகவும் ஆனால் கணவர் அதற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லெபனான் நாட்டைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பார்ட்டி வைக்க தனது கணவரிடம் அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் கணவர் அதற்கு அனுமதி தரவில்லை என்பதால் அவர் கணவர் மீது ஆத்திரமாக இருந்ததாக தெரிகிறது.
ஆனால் அந்த ஆத்திரத்தை அவர் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் கணவனுக்கு படிப்படியாக விஷம் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டார். இதனை அடுத்து அவர் வழக்கமாக குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கணவர் குடிக்கும் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கணவர் அந்த குளிர்பானத்தை குடிக்கும் போது ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார். அதன்பின் அவர் மனைவி மீது சந்தேகப்படத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து மனைவியின் செயலை ரகசியமாக கண்காணிக்க அவர் வீடியோ பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் தான் குடிக்கும் குளிர்பானத்தில் தனது மனைவி விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து மனைவியிடம் விசாரணை செய்த போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்தனர். இதை அடுத்து அவரை சிறையில் அடைத்த நிலையில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு கடும் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.