இதனாலாதான் நான் மும்பைக்குக் குடிபோனேன்.. புட்டு புட்டு வைத்த சூர்யா..

By John A

Published:

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி அன்று உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்களிடமும், ஒட்டுமொத்த தமிழ்சினிமா உலகமும் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. சிறுத்தை சிவா இயக்கியயுள்ள இப்படத்தினை ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருகிறார். இந்நிலையில் கங்குவா படத்தின் புரோமோஷன் பணிகளில் சூர்யாவுடன், நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றில் கங்குவா படத்தின் புரோமோஷனுக்காக சூர்யாவின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. அதில் சூர்யா தான் ஏன் சென்னையிலிருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்தேன் என்ற காரணத்தினைக் கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனிடம் தி கோட் பட துப்பாக்கி காட்சி பற்றி கேள்வி.. SK கொடுத்த ரியாக்ஷன் பதில்..

அதில், “எப்போதுமே நான் ஏன் என்னை மட்டும் யோசிக்கனும், 27 வருடம் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் சென்னையிலேயே இருந்தார் ஜோ. அவரோட சந்தோஷத்தை நான் ஏன் பறிக்கணும். எனக்குத் தேவைப்படுவதெல்லாம் அவருக்கும் தேவைப்படும் தானே. நாம் ஏன் ஒரு பெண்ணிடமிருந்து அவரது பெற்றோருடனான நேரத்தை அபகரிக்க வேண்டும்? ஒரு பெண்ணின் வாழ்வியலை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறையை எப்போது நாம் மாற்றிக் கொள்ளப் போகிறோம்.

ஏன் எப்போதும் ஒரு ஆண் எடுப்பவனாகவே இருக்க வேண்டும்? எப்போ இதையெல்லாம் மாற்றுவது? இந்தக் கேள்விகள்தான் என்னை மும்பைக்குக் குடிபெயர வைத்தது.” என்று கூறியிருக்கிறார் சூர்யா.

சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், மற்றொரு மகனும் உள்ளனர். சூர்யா மும்பைக்குக் குடி பெயர்ந்தது திரைஉலகில் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் தற்போது அவற்றிற்கு விடை அளித்திருக்கிறார் சூர்யா.