கமல், ரஜினியின் வாரிசுகளுக்கு சாதகமாகும் என்று நினைத்தால்… இவருக்கு அல்லவா அதிர்ஷ்டம் அடித்துள்ளது?!

By Sankar Velu

Published:

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு இரு பெரும் ஜாம்பவான்கள் யார் என்றால் அது ரஜினியும், கமலும் தான். இவர்கள் எந்த அளவிற்கு திறமையுடன் சினிமா உலகில் ஜொலித்தார்களோ, அந்த அளவு அவர்களது பிள்ளைகளால் இன்னும் ஜொலிக்க முடியவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று நாம் நினைத்திருப்போம். அது வேறொன்றும் அல்ல. அப்படின்னா என்னன்னு பார்ப்போமா…

ரஜினியைப் பொறுத்த மட்டில் இந்த விஷயத்தில், அவர் மகள் இருவரையும் இண்டஸ்ட்ரியில் நுழைய ஒருபோதும் அவர் ஊக்குவித்ததே இல்லை. அப்படி என்றால் அவர் எதை விரும்பினார் என்று கேட்பீர்கள்.

ரஜினிகாந்த் தம் பிள்ளைகள் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக வேண்டும் என்று தான் விரும்பினார். அதே போல் அவர்கள் கிளாசிக்கல் பாடகர்களாக மாற வேண்டும் என்றும் விரும்பினார்.

Rajni and Daughters
Rajni and Daughters

பின்னர் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசையில் ஐஸ்வர்யாவிடம் தனது முந்தைய கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு தனது எண்ணத்தைச் சொன்னார்.

ஆனால் அவரோ நடிகர் தனுஷை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதனால் ரஜினி கோபம் அடைந்தார் என்றும் அப்போது வதந்திகள் பரவின. ஆனால் அது தவறு. அவர் ஒரே பீல்டில் அதாவது சினிமா துறையிலேயே தன் பெண்ணுக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை.

தனது 2வது மகள் சௌந்தர்யாவைப் பொறுத்தமட்டில் எல்ஏ இல் சிஜிஐ நிபுணராக பணிபுரிய வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டார். அதே நேரம், மேட்ரிக்ஸ் மற்றும் ஜுராசிக் பார்க் போன்ற படங்களில் பணியாற்ற வேண்டும் என்றும் விரும்பினார்.

Kochadaiyan
Kochadaiyan

ஆனால் அவரோ கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார். மொத்தத்தில் ரஜினி மகள்கள் இருவரும் அவர் விரும்பாததை செய்து முடித்தனர் என்றே சொல்லலாம். 3 ஆண் பேரக்குழந்தைகள் இருப்பதுதான் ரஜினிக்கு ஒரே மகிழ்ச்சி.

இந்த விஷயத்தில் கமல் ரொம்பவே வித்தியாசமானவர். ‘உனக்கான வாழ்க்கைப் பாதையை நீயே போட்டுக்கொள்” என்று தான் தம் மகள்களிடம் சொன்னார்.

Kamal and Daughters
Kamal and Daughters

ஸ்ருதிஹாசன் முதலில் எளிய ஒரு பாடகியாகி பாப் ஆல்பங்களை பதிவு செய்ய விரும்பினார். பின்னர் அவர் நடிப்புக்கு மாறினார். புலி மற்றும் 7 ஆம் அறிவு படத்தைக் கிளிக் செய்யாதபோது, ​​​​அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அக்ஷரா. கமலின் 2வது மகள்.

இருவரும் ஹாசன் பெயருக்குக் கடன்பட்ட வழக்கமான நட்சத்திரக் குழந்தைகள். அவ்வளவு தான். அவர்களது மிகவும் திறமையான உறவினர் சுஹாசினி. அதே போல் மிகவும் திறமையான இன்னொரு உறவினர் அனுஹாசன்.

அவர்களைப் போல் அல்லாமல், அவர் கோலிவுட்டுக்கு மிகவும் சாதாரணமானவர் என்று தன்னை அக்ஷரா வெளிப்படையாகக் கூறிவிட்டார். இதனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் இணைந்து தனுஷ_டன் நடித்த 3 படம் தோல்வியில் முடிந்தது. ஆனால், இந்தப் படத்தில் அறிமுகமான இசை அமைப்பாளர் அனிருத் மட்டும்  டாப் கியர் போட்டு முன்னுக்கு வந்து விட்டார்.