உலகநாயகன் கமல் நடித்து திரைக்கதை எழுதிய படம் தேவர் மகன். பரதன் இயக்கி இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் அருமையான திரைக்கதை என்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
இந்தப் படம் தி காட்பாதர், சைனா டவுன் ஆகிய ஹாலிவுட் படங்களின் தாக்கத்தின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. இருந்தாலும் படத்தில் காட்டப்படும் திரைக்கதை பாமரர்களுக்கும் புரியும் விதத்தில் எளிமையாக எடுக்கப்பட்டுள்ளதுரு. குடும்பம், பாரம்பரியம், நவீனம், வன்முறை, சாதி ஆகியவற்றைப் புட்டு புட்டு வைக்கிறது.
கேரக்டர்களைப் பார்த்தால் யாரையுமே குறை சொல்ல முடியாது. எல்லாமே அவரவர்களுக்கு சளைத்தது அல்ல என்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.
சக்தியாக வரும் கமல் ஒரு மேற்கத்திய மற்றும் லட்சியம் நிறைந்த இளைஞனாக வருகிறார். அவருக்கு சமூகத்தின் மீது அக்கறை அதிகளவில் உள்ளது. அதன் காரணமாக பொறுப்புள்ள தலைவனாகிறார். திரைக்கதை 3 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதலில் ஒவ்வொன்றும் தெளிவான நோக்கத்தைக் கொண்டுள்ளது.
கதை சொல்லும் நேர்த்தி, கிளைமாக்ஸ் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவு கிளைமாக்ஸ் காட்சியும் முக்கியம். அதை எந்தவித சிக்கலும் இல்லாமல் அருமையாகக் கொண்டு வந்துள்ளார். மேலும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் வெகு அழகாக சொல்லப்பட்டுள்ளன.
முதலில் சென்னையில் உணவகங்கள் நிறுவ விரும்பும் கமலுக்கு அது தந்தையிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கிறது. அடுத்த கட்டத்தில் திரைக்கதையில் பதற்றம் தொற்ற ஆரம்பிக்கிறது. சக்தியின் குடும்பத்திற்கும், அவரது போட்டியாளர்களுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாகிறது. இது தந்தையின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. சக்தி புதிய தலைவனாகிறார். எதிரிகளுடன் இறுதியில் மோதுகிறார்.
இந்தப் படத்தில் திரைக்கதை வெறுமனே சொல்லப்படாமல் வசனம், குறியீடு, காட்சிப்படுத்துதல் என அனைத்தையும் தெளிவாக சொன்னது. தேவர் சமூகத்தின் பேச்சுவழக்கு, கலாச்சாரத்தை பிரதிபலித்தது. குடும்ப உறுப்பினர்களின் பகை கிராமம் முழுவதும் பற்றிக் கொள்கிறது.
கேரக்டர்களின் ஆளுமையும், உணர்ச்சிகளும் யதார்த்தமாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. சக்தி மீண்டும் கோவிலைத் திறப்பது, எதிரிகள் அணைக்கட்டை உடைப்பது, தந்தையிடமிருந்து பெறும் வாள் என அனைத்திலும் கேரக்டர்களின் குணாதிசயங்கள் தென்படுகின்றன.