அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு தெரியுமா? குஷ்பூவின் நெத்தியடி பதில் இதுதான்…!

‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’னு அப்பவே ராஜா சின்ன ரோஜா படத்தில் பாட்டை வச்சிருப்பாங்க. அந்தப் பாட்டுல ரஜினியின் டான்ஸ் பிரமாதமா இருக்கும். பைரவி படத்தில் தான் சூப்பர்ஸ்டாராக மாறினார் ரஜினிகாந்த். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தான் அவருக்கு இந்தப் பட்டத்தைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அவர்களுக்குப் பிடிக்கும் வகையில் ஸ்டைலை மாஸாகக் காட்டுவதில் ரஜினிக்கு நிகர் அவர் தான். வாயில் ஸ்டைலாக சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது, தீப்பெட்டியைப் பற்ற வைக்கும் ஸ்டைல், நடக்கும்போதும், ஓடும் போதும், ஆடும்போதும், பேசும்போதும், ஸ்டைலாக தலைமுடியைக் கோதி விடும்போதும் எப்பவுமே அவர் சூப்பர்ஸ்டார் தான்.

ரஜினியும், குஷ்புவும் இணைந்து அண்ணாமலை படத்தில் ‘கொண்டையில் தாழம்பூ’ பாடலுக்கு நடனமாடுவார்கள். அந்தப் பாடலில் குஷ்பூவின் பெயரும், ரஜினியின் பெயரும் மாறி மாறி வரும். அப்படி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த இவரைப் பற்றி குஷ்பூ ஒருமுறை இப்படி தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவரோட ஸ்டைல், நடை, உடை, பாவனை வேறு யாருக்கும் வராது. அந்த வகையில் அவருக்குப் பிறகும் யார் வந்தாலும் சூப்பர்ஸ்டாராக முடியாது.

Rajni Kushboo
Rajni Kushboo

பல வருடங்களுக்கு முன்பு குஷ்புவிடம் அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு நிருபர் ஒருவர்கேட்டாராம். அதுக்கு சூப்பர்ஸ்டார்னா அது ரஜினி மட்டும் தான். வேறு யாரும் அந்த இடத்தில் இருக்க முடியாது.

ரஜினி திரையுலகிற்கு வரும்போது அவர் சூப்பர்ஸ்டாராக வருவார்னு யாரும் எதிர்பார்க்கல. இன்னும் சொல்லணும்னா இதை அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். ரஜினி சினிமா உலகில் அடி எடுத்து வைத்தபோது அவர் எம்ஜிஆர் இடத்தைப் பிடிப்பாரா இல்லை சிவாஜி இடத்தைப் பிடிப்பாரான்னு தான் கேட்டாங்க.

ஆனால் அவங்க இடத்தையா ரஜினி பிடித்தார்? யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாதுங்கறது தான் இங்க நடக்குற உண்மை. இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா, விஜய், அஜித் இடங்களை யாரு பிடிப்பார்னு கூட கேட்கலாம்.

அது தவிர்க்க முடியாத ஒன்று என்பது தான் குஷ்பு அந்த நிருபருக்கு அளித்த பதில. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.