நயன்தாராவை நான் எங்கு பார்த்தாலும் அங்கேயே எட்டி உதைப்பேன்… பிரபுதேவா மனைவி ஆவேசம்!!

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக கால் பதித்தார், 2005 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர், 15 ஆண்டுகளாக சினிமாத் துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர்…

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக கால் பதித்தார், 2005 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர், 15 ஆண்டுகளாக சினிமாத் துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் 2006 ஆம் ஆண்டு சிம்புவுக்கு ஜோடியாக வல்லவன் படத்தில் நடித்து இருப்பார். அந்தப் படத்தில் சிம்பு- நயன்தாராவுக்கு ஏற்பட்ட நட்பானது காதலானது. இவர்கள் காதல் குறித்து வதந்திகள் வந்தாலும், நயன்தாரா அதனை ஒப்புக் கொள்ளவில்லை.

அதன்பின்னர் ஒப்புக் கொண்ட இந்த ஜோடி சில ஆண்டுகள் காதல் ஜோடியாக வலம் வந்தது, அதன்பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. அதன்பின்னர் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்திவந்த நயன்தாரா 2009 ஆம் ஆண்டு வில்லு படத்தில் நடிக்கும்போது பிரபுதேவாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரைத் திருமணம் செய்த முடிவு செய்தார்.

40a0c1e5f6c7a7f8b9137debf8254ddc

ஆனால் பிரபு தேவாவின் மனைவி இந்த விஷயத்தினை செய்தியாளர்களிடம் கூற், இந்த செய்தி பெரிய அளவில் பிரச்சினை ஆனதை அடுத்து, இவர்கள் காதல் முறிந்து போனது. தற்போது விக்னேஷ் சிவனை நயன் காதலித்து வருகிறார்.

இந்தநிலையில் பிரபு தேவாவின் மனைவி ரம்லத் சமீபத்தைய பேட்டியில், ”பிரபு தேவா- நயன்தாரா காதல் குறித்த செய்திகளை நான் வதந்தி என்று நினைத்தேன். காரணம் எங்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளில் அவர் ஒரு சிறந்த கணவராக இருன்து வந்துள்ளார்.

நயன்தாரா தன் வலையில் என் கணவரை விழச் செய்தபின்னர் தான் இவை அனைத்தும் மாறின. நயன்தாராவுக்கு சரியான தண்டனை கிடைக்கவில்லை என்பது என் வருத்தமாகும். ஆனால் நான் அந்த தண்டனையினை நிச்சயம் கொடுப்பேன், நயன்தாராவை நான் எங்கு பார்த்தாலும் அங்கேயே எட்டி உதைப்பேன்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன