கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறு தொழில்கள் முதல் சினிமாத் துறை வரை அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இந்த நேரத்தில் நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் வலைதளங்களில் உரையாடுவது, ஆன்லைனில் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிடுவது, யூ டியூப் சேனல் ஆரம்பிப்பது, டிக் டாக்கில் வீடியோக்களை பதிவிடுவது, சமைப்பது என பல வகைகளில் ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது அந்த வகையில் ஹாலிவுட் நடிகைகள் உடை அணியாமல் தலையணையினை வைத்து உடலை மறைத்து போட்டோஷுட் நடத்தி அதை வலைதளங்களில் வைரலாக்குவதோடு, மற்றவர்களுக்கு தலையணை சேலஞ்ச் என்று சவாலாக கொடுத்து வந்தனர்.
இந்த பில்லோ சேலஞ்ச் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளது. இந்திய நடிகைகள் பலரும் பில்லோவினை மட்டும் வைத்து உடலை மறைத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஸ்ரேயா திரை உலகின் முக்கிய நாயகர்கள் பாத்திரம் கழுவும் வீடியோவை வலைதளங்களில் பதிவிடக் கூறியதை அடுத்து, தமிழ் சினிமாவின் பல நடிகர்கள் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.