நடிகர் ரஜினிகாந்த் இமயமலை யாத்திரை செல்வதன் மர்மம் என்ன….?

Published:

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுஎன்ன தான் படபிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது சிறு இடைவேளை எடுத்துக் கொண்டு இமயமலைக்கு கிளம்பி விடுவார். அப்படி என்னதான் இமயமலையில் இருக்கிறது என்று பலருக்கு தோன்றலாம். தனது இமயமலை பயணத்திற்கு காரணம் என்னவென்று ரஜினிகாந்த் அவர்களே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

அதாவது ரஜினி அவர்கள் மகாஅவதார் பாபாஜியை தனது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட பின்பு பாபாஜி இமயமலையில் தியானம் செய்த குகையை தரிசித்து தானும் அவ்விடத்தில் தியானம் செய்ய விரும்பி இமயமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். அங்கிருந்த இயற்கை எழிலும்,கங்கையின்புனிதமும்காணக்கிடைக்காத அரிய மூலிகைச் செடிகளும் ரஜினி அவர்களின் மனதை ஈர்த்தனஅதுமட்டுமின்றி பல அதிசயங்களை கண்டதாகவும் கூறியுள்ளார்அந்த அதிசயங்களில் ஒன்றை மேற்க்கோள் காட்டி ரஜினி அவர்கள் கூறியுள்ளார்.

rajini2

அது என்னவென்றால் ,ரஜினி அவர்கள் இமயமலை கங்கையில் நீராடும் போது அவர் அணிந்திருந்த ருத்ராட்சம் தொலைந்து விட்டதாம்அதனால் மிகவும் வருத்தப்பட்டு கொண்டு அங்கு நடந்து சென்று கொண்டிருக்கையில் அவரின் எதிரே அகோரிகள் வந்து கொண்டிருந்தார்களாம்அந்த அகோரிகளில் ஒருவர் ரஜினியின் முகத்தைப் பார்த்துகவலைபடாதேருத்ராட்சம் உன்னை தேடி வரும் என்று கூறி சென்றுவிட்டாராம்அதற்கு பிறகு ரஜினி தங்கியிருந்த ஆசிரமத்தை சென்றடைந்ததும். அங்கே ஒரு வயதான பெண்மணி ரஜினியை தேடி வந்து ருத்ராட்சத்தை பரிசளித்தாராம்

அந்த அனுபவம் தன்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாகவும்இமயமலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அடிக்கடி யாத்திரை செல்ல ஆண்டவன் அருள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்அங்கு கிடைக்கும் அரிய வகை மூலிகைகளை உட்கொள்வதால் வைட்டமின் போன்ற சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கிறது எனவும்வியாசர்,  வஷிஷ்டர் போன்ற சித்தர்கள் தியானம் செய்த இடமாததால்இமயமலையில் நேர்மறை எண்ணங்களை அதிகமாக உணர்வதாகவும் கூறியுள்ளார்.

நம் உடல் நலனுக்கு மருந்துகள் எடுத்து கொள்வது போல், நம் மனதிற்கும் புத்திக்கும் ஆன மருந்து தான் ஆன்மீக பயணங்கள் மற்றும் யாத்திரைகள். அதனால் வேலை பளுவிற்கு நடுவே சிறு சிறு பயணங்கள் மேற்கொண்டு மனதை சாந்தி படுத்துங்கள் என்று கூறுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இமயமலை யாத்திரை தன் மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும்தன் உயிருள்ள வரை இமயமலை யாத்திரை செல்வேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...