என்ன ஒரு அழகு ஜோடி… வைரலான ராணா- மிஹீகா பஜா நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!

பாகுபலி திரைப்படத்தில் கதாநாயகனான பிரபாஸுக்கு இருக்கும் முக்கியத்துவம் ஹீரோயின் அனுஷ்கா, தாயார் ரம்யா கிருஷ்ணன், வில்லன் ராணா டகுபதி என அனைவருக்கும் இருக்கும். ஒரே படத்தின் மூலம் தமிழ், மலையாள, கன்னட, இந்தி ரசிகர்கள்…

பாகுபலி திரைப்படத்தில் கதாநாயகனான பிரபாஸுக்கு இருக்கும் முக்கியத்துவம் ஹீரோயின் அனுஷ்கா, தாயார் ரம்யா கிருஷ்ணன், வில்லன் ராணா டகுபதி என அனைவருக்கும் இருக்கும். ஒரே படத்தின் மூலம் தமிழ், மலையாள, கன்னட, இந்தி ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் பிரபலமாகிப் போனார்.

அதன்பின்னர் அவர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு முகம் கொடுத்தது பாகுபலிதான்.

இவர் குறித்த திருமண விஷயங்கள் அவ்வப்போது செய்திகளாக வந்தவண்ணமே உள்ளது. அவற்றிற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் சமீபத்தில் நடிகர் ராணா 10 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய காதலி மிஹீகா பஜா குறித்து ட்விட்டரில் அறிவித்தார்.

e9509e434cdc5d0cab943573feb7419e

மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் என்று குறிப்பிட்டதோடு, இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் ராணாவும்-  மிஹீகா பஜா நிச்சயதார்த்த கெட்டப்பில் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தன. இந்த நிச்சயதார்த்தமானது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த அழகு ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன