தமிழ் சினிமாவில் ஒருவரின் பெயரினைச் சொன்னால் கரகோஷத்தினால் வரும் ஓசை வானத்தைப் பிளக்கும் எனில் அஜித் ஒருவருக்காகத்தான் இருக்கும். ரஜினி, கமல் 50 வருடங்களைக் கடந்த சினிமா வாழ்க்கையில் பெற்ற புகழினை மிக விரைவில் பெற்றவர் அஜித்.
அஜித் ரசிகர்கள் மன்றம் வேண்டாம் என்று கூறி கலைத்தாலும், ரசிகர்கள் விட்டபாடில்லை. பொது நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என எதற்கும் அஜித் வராமல் போனாலும் ரசிகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் படப் பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று அஜித் ஷாலினியுடன் மருத்துவமனை ஒன்றிலிருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் உள்ள யாரையோ பார்த்துவிட்டு வெளியேறுவதாக அதில் தெரிந்தது.
ரசிகர்கள் பலரும் அந்த நபர் யாராக இருப்பார் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்க, அஜித்தின் அப்பாவுக்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.