பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் ஜூன் 23 ஆம் தேதி துவங்கியது, இப்போட்டி கடந்தவாரம் 106 நாட்கள் முடிவடைந்தநிலையில் பிரமாண்ட இறுதிவிழாவோடு முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதல் பரிசினைப் பெற்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ், அவருக்கு 50 லட்சம் பரிசுத் தொகையும் பதக்கமும் வழங்கப்பட்டது.
உள்ளே இருந்தபோது அனைவரையும் தன் பாடலால் கவர்ந்தவர் முகின் ராவ், புதிது புதிதாக பாடல்களை அவ்வப்போது பாடுவது இவரது வழக்கமாகும்.
அதிக அளவில் தமிழ் மக்களைக் கவர்ந்து, முதல் பரிசினைப் பெற்றதோடு தமிழகத்தில் 2 வாரங்கள் தங்கி இருந்து ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மலேசியா ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து கிளம்பினார் முகின் ராவ், மலேசியா சென்ற அவருக்கு மலேசிய ரசிகர்கள் சிறப்பான வரவேற்பினைக் கொடுத்தனர்.
விமான நிலையத்திற்கு முகின் புகைப்படம் பொறித்த வாகனம் வந்தது, அதில் ஏறி மிகுந்த மகிழ்ச்சியோடு வீடு சேர்ந்தார். மலேசிய மண்ணில் அவர் எதிர்பார்த்ததைவிட சிறப்பான வரவேற்பு அவருக்கு கிடைத்தது.