நாங்க யார் கட்சியில் வேண்டுமானாலும் சேர்வோம்… கடுப்பாகி கத்திய வெங்கட்பிரபு…

By Meena

Published:

இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியரான கங்கை அமரன் அவர்களின் மூத்த மகன் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது இளைய சகோதரர் பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ஆவார். இவரின் பெரியப்பா தான் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஒரு இசை மற்றும் சினிமா குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவர் வெங்கட் பிரபு.

இளம் வயதில் இசைஞானி இளையராஜா அவர்களின் மகன்களான இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா அவர்களின் ஸ்டூடியோவில் பின்னணி இசையில் பாடிக் கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. பின்னர் தனது குழந்தை பருவ நண்பர்கள் ஆன எஸ்பிபி சரண் மற்றும் யுகேந்திரன் ஆகியவர்களை வைத்து நாளைய தலைமுறை என்ற இசை குழுவை ஆரம்பித்தார். பின்னர் 1998 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கிய பூஞ்சோலை திரைப்படத்தில் சங்கீதாவுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

ஏப்ரல் மாதத்தில், ஜி, சிவகாசி, போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் வெங்கட் பிரபு. பின்னர் படம் இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த வெங்கட் பிரபு 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற படத்தில் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். புது முகங்கள் ஜெய், பிரேம்ஜி அமரன், வைபவ், மிர்ச்சி சிவா ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த படத்தில் 11 புது முகங்கள் பணியாற்றினர். அடுத்ததாக 2008 ஆம் ஆண்டு சரோஜா, 2010 ஆம் ஆண்டு கோவா, 2011 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து பிளாக்பஸ்டர் திரைப்படமான மங்காத்தா போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களுள் ஒருவரானார் வெங்கட் பிரபு.

தற்போது நடிகர் விஜய் வைத்து கோட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு விஜயின் கட்சியை பற்றி கேட்டதும் டென்ஷனில் கடுப்பாகி கத்தியுள்ளார் வெங்கட் பிரபு.

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நீங்கள் விஜய்யை வைத்து படம் எடுத்ததனால் விஜய் கட்சியில் உங்கள் வீட்டில் இருந்து ஒரு எம்எல்ஏ வருவாங்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டென்ஷனான வெங்கட் பிரபு அரசியலையும் சினிமாவையும் ஏன் ஒன்றாக பார்க்கறீங்க. அப்படியே என்றாலும் எங்கள் குடும்பத்தில் நாங்கள் எந்த கட்சியில் வேணும்னாலும் சேர்வோம். அதை நீங்க ஏன் கேக்குறீங்க .அது எங்களோட பர்சனல் என்று கூறி கத்தியுள்ளார் வெங்கட் பிரபு.