விக்ரமனுக்கு கட்டாயப்படுத்தி ஓட்டு போடப்படுகிறதா? அதிர்ச்சி வீடியோ

By Bala Siva

Published:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமனுக்கு கட்டாயப்படுத்தி வாக்குகள் போடப்படுவதாக வெளிவந்திருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கு மேல் நடந்த நிலையில் நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது என்பதும் இதில் விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் ஆகிய மூன்று போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது தெரிந்தது.

கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பின்னர் விக்ரமன் தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் நிலைமை மாறி உள்ளதாக தெரிகிறது. அரசியல் கட்சி தலைவர் ஒருவர் விக்ரமனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதை அடுத்து விக்ரமனுக்கு எதிர்ப்பாக வேண்டும் என்றே சிலர் மாறி உள்ளதாகவும் அசிம் தான் டைட்டில் வின்னர் பட்டம் பெறுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து விசாரித்த போது அசிமுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அவர்தான் டைட்டில் வின்னர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் கிராமத்து மக்களிடம் சென்று அவர்களுடைய செல்போனை கேட்டு பெற்று, விக்ரமனுக்கு வலுக்கட்டாயமாக ஒரு சிலர் ஓட்டு போட்டு வருவதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் செல்போன்களை சம்பந்தப்பட்ட நபர்களை வாங்கி விக்ரமனுக்கு ஓட்டு போட்டுவிட்டு ஓடிபி பதிவு செய்து வருவதாக அந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. இந்த வீடியோவை விக்ரமன் ஆர்மியினர் பதிவு செய்துள்ள நிலையில், அசீம் ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டு போடுவது என்பது தாங்களாவே சுயமாக போட வேண்டிய ஒன்று என்ற நிலையில் எப்படி இன்னொருவர் செல்போனை வாங்கி விக்ரமனுக்கு வலுக்கட்டாயமாக ஓட்டு போடலாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அறம் வெல்லும் என்று கூறியது கட்டாயப்படுத்தி வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது தானா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் கலந்து உள்ளதால் இந்த நிகழ்ச்சி தனது தனித்தன்மையை இழந்து விட்டதாகவும் நடுநிலை பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.