ஒரே நேரத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம்.. அட்டகாசமான வெற்றியுடன் தேசிய விருது வரை வென்ற தல படம்..

By John A

Published:

தமிழ் சினிமாவில் மூன்றாம் பிறை தரமான காவியப் படைப்பினைக் கொடுத்து சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்த நிறுவனம் தான் சத்யஜோதி பிலிம்ஸ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பகல் நிலவு, இதயம், கிழக்கு வாசல் என பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்த நிறுவனம் இது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் ஜி. தியாகராஜன். பல படங்களைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அஜீத்குமார் நடிப்பில் விவேகம் படத்தினை கடந்த 2016-ல் தயாரித்தது. இப்படம் 2017 ஆகஸ்ட் மாதம் வெளியானது.

சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த அஜீத் முதல் இரு படங்களான வீரம், வேதாளம் போன்று இல்லாமல் கொஞ்சம் ஸ்டைலிஷாக எடுத்தார். ஆனால் இப்படம் சரிவர போகவில்லை. படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றாலும் அஜீத் ரசிகர்களுக்கே இப்படம் போரடித்தது. அனிருத் இசையாலும், அஜீத், விவேக் ஓபராய் ஆக்ஷன் காட்சிகளும் படத்தினைக் காப்பாற்றியது.

எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? குற்ற வழக்கு தொடர்வுத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தப் படத்தின் கலவையான விமர்சனங்களால் நடிகர் அஜீத் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனை அழைத்து மீண்டும் நாம் அடுத்த படம் ஒன்று தயாரிக்கலாம் என்று கூறி சிறுத்தை சிவாவையே தனது 58-வது படத்திலும் இயக்குநராக்கி உருவான படம் தான் விஸ்வாசம். பக்கா கிராமத்து சப்ஜெக்ட். ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி, சண்டை என முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களையும், பெண்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டது விஸ்வாசம் திரைப்படம்.

குறிப்பாக முதல் பாதிப் படம் கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்டதால் இப்படம் சி சென்டர் ஆடியென்ஸையும் விட்டு வைக்கவில்லை. படம் வெளியீட்டிற்குத் தயாராக இருந்த போது இப்போது கங்குவா படத்துக்குப் போட்டியாக வேட்டையன் வந்தது போன்று 2019 பொங்கல் தினத்தன்று ரஜினியின் பேட்ட படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் தயாரிப்பாளர் தியாகராஜன் ரஜினி படமும் வருகிறது. இதனால் வசூல் பாதிக்குமே என நினைத்திருக்கிறார். ஆனால் திட்டமிட்டபடி விஸ்வாசம் பேட்ட படத்துடன் போட்டி போட்டு வெளியானது. அதன்பின் படம் பெற்ற வெற்றியைச் சொல்ல வேண்டியதில்லை. இமான் இசையில் தியேட்டரே கண்ணீரில் நனைந்தது. கண்ணான கண்ணே பாடல் பல அப்பாக்களின் தேசிய கீதமானது. சிறந்த இசைக்காக இமானுக்கு தேசிய விருது கிடைத்தது.

படமும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தியேட்டரை விட்டு அஜீத் ரசிகர்களே கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்த காட்சியைப் பார்த்து தியாகராஜன் படத்தின் வெற்றியை உறுதி செய்து மகிழ்ச்சியில் திளைத்தாராம்.