க்யூட்டி எப்போது உன்னை பார்க்க போகிறேன்?.. வருத்தத்தில் விஷ்ணு விஷால்!!

விஷ்ணு  2009 ஆம் ஆண்டு வெண்ணிலாக் கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்தத் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. மேலும் அதனைத் தொடர்ந்து நீர்ப்பறவை,…

விஷ்ணு  2009 ஆம் ஆண்டு வெண்ணிலாக் கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்தத் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

மேலும் அதனைத் தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக் கூட்டம், ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

9cb541205e37fd80c75a85a786fad915

இவர் தனது சினிமா வாழ்க்கையில் ஜொலிக்காதபோதே தனது நீண்ட கால் காதலியான ரஜினி நட்ராஜை பெற்றோர் சம்மதத்துடன் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளநிலையில், இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

நடிப்பில் ஒருபுறம் பிசியாக இருந்துவரும் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நேரத்தினை செலவிட்டும் வருகிறார், இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரின் நெருக்கமான புகைப்படங்கள் அவ்வப்போது வலைதளங்களில் கசிந்து வருவது வழக்கமாக உள்ளது.

இந்தநிலையில், தன் மகன் ஆர்யன் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விஷ்ணு விஷால், கேப்ஷனாக, “க்யூட்டி எப்போது உன்னை பார்க்க போகிறேன்? என்று வருத்தமாக பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன