ரேஷ்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்… வெளியான வீடியோ!!

By Staff

Published:

விஜய் தொலைக்காட்சி முதல் 2 சீசனைப் போலவே 3 ஆவது பிக் பாஸ் சீசனும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ரேஷ்மா.

இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் என மொத்தமாக 6 படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்களில் இவருக்கு பெரிய அளவில் பெயர் எடுத்துக் கொடுத்தது வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடிதான்.

f4de794a427d74376d86c1f1ac1e7088

அதைத்தவிர சன் சிங்கர் ஆங்கராக பணியாற்றிய இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க வாணி ராணி, மரகத வீணை, உரிமை, என் இனிய தோழியே, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகை ரேஷ்மா தற்போது பேயம்மா, போடா முண்டம், மை பெர்பெக்ட் ஹஸ்பண்டு போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமீபகாலமாக அவ்வப்போது பிக் பாஸ் பிரபலங்கள் யாராவது ஒருவர் வீட்டிற்கு விசிட் அடித்தும் வந்தார். 

a690f2e8c87af920f2f30d0ead8c0151

தற்போது கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில். அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கண்ணான கண்ணே பாடல் ஒலிபரப்பாக, அவரது மகன் காபி சர்ப்ரைஸாக போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

மேலும் வீடியோவில் ரேஷ்மா தனது மகன் குறித்து ரசிகர்களுக்கு அறிமுகம் கொடுக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஹேப்பியா இருங்க ரேஷ்மா என்று கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment