
விஷால் நடித்த ’ஆக்ச’ன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து தற்போது அவர் ’சக்ரா’ மற்றும் ’துப்பறிவாளன் 2’ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் ’துப்பறிவாளன் 2’படத்தை முடிப்பதற்கு ரூபாய் 40 கோடி மிஷ்கின் கேட்டதாகவும் இதனால் அவர் அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இது குறித்து கருத்து தெரிவித்த மிஷ்கின் நான் விஷாலிடம் 40 கோடி கேட்டேன் என்று யார் கூறியது? அவரிடம் நான் ரூ.400 கோடி கேட்டேன் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 500 கோடி, இதில் 100 கோடி செலவழித்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் 100 கோடி தேவை எனவே மீதமுள்ள படத்தை முடிக்க 400 கோடி கேட்டேன் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று கிண்டலாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் ’துப்பறிவாளன் 2’படத்தின் மீதிப்படத்தை விஷாலே இயக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது