சர்வதேச விருதுக்கு தேர்வு.. 5வது படத்திலேயே சாதனை செய்த விஜயகாந்த்..!

By Bala Siva

Published:

கேப்டன் விஜயகாந்த்தின் ஆரம்ப கால படங்களை விமர்சனம் செய்த விமர்சகர்கள் இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று கணித்தனர். அதேபோல் தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத நடிகராக விஜயகாந்த் விளங்கினார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமான விஜயகாந்த் அதன் பிறகு அகல்விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ போன்ற படங்களில் நடித்தாலும் தூரத்து இடி முழக்கம் என்ற படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதுமட்டுமின்றி இந்த படம் சர்வதேச விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

விஜயகாந்தின் ஐந்தாவது படமே சர்வதேச விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது மட்டுமின்றி தேசிய விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு மீனவராக நடித்திருந்தார். கடலில் இருந்து மிதந்து வரும் குழந்தையை காணும், மீனவ கிராமத்தின் தலைவர் பொன்னன் என்ற பெயரிட்டு வளர்ப்பார். அவர்தான் விஜயகாந்த்.

இவர் குயவர் சமூகத்தைச் சேர்ந்த பூர்ணிமா தேவியை காதலிப்பார். ஆனால் பூர்ணிமாவை அவரது முறைமாமன் பீலிசிவம் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புவார்.

ஒரு படத்தோட தோல்வியாலதான் இன்னொரு படத்துக்கு வெற்றி கிடைத்ததாக சொல்வது தவறு… சித்தார்த் பளிச் பதில்!

இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விஜயகாந்த் திரும்ப வரமாட்டார் அவருடன் சென்ற பீலிசிவம் விஜயகாந்த் இறந்துவிட்டதாக கூற, தற்கொலைக்கு முயலும் பூர்ணிமா, அதன் பிறகு மனமாறி பீலிசிவத்தை திருமணம் செய்து கொள்வார்.

இந்த நிலையில் இறந்து விட்டதாக கருதப்பட்ட விஜயகாந்த் உயிரோடு வருவார். ஆனால் தன்னுடைய காதலிக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை அறிந்ததும் அவர் அந்த ஊரில் இருக்க விரும்பாமல் தான் கொண்டு வந்த வலம்புரி சங்கை மட்டும் தனது வளர்ப்பு தந்தை வீட்டின் முன் வைத்து விட்டு சென்று விடுவார். அந்த சங்கை பார்த்தவுடன் விஜயகாந்த் உயிருடன் இருப்பதாக அறிந்து கொள்ளும் அவருடைய வளர்ப்பு தந்தை, அவரை தேடுவார்.

இந்த நிலையில் பூர்ணிமாவுக்கு குழந்தை பிறக்க, அந்த ஊரில் உள்ள மந்திரவாதி தன்னுடைய பூஜைக்கு குழந்தையை கொண்டு வந்தால் ஏராளமான தங்கம் கொடுப்பதாக பூர்ணிமா கணவருக்கு ஆசை காட்டுவார். அதை நம்பி தன்னுடைய குழந்தையை அந்த மந்திரவாதியிடம் கொடுப்பதற்காக செல்வார்.

7500 நாடகங்கள்.. பல திரைப்படங்கள்.. நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் கலையுலக பயணம்..!

இதை தனது நண்பர் மூலம் தெரிந்து கொண்ட விஜயகாந்த் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றுவார். இந்த சண்டையில் பூர்ணிமாவின் கணவர் பீலிசிவமும் இறந்து விடுவார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவரையும் முன்னாள் காதலரையும் கொன்ற மந்திரவாதியை பழிவாங்குவதற்காக பூர்ணிமா இறைவனை வேண்டி தவமிருப்பார். அப்போது தூரத்தில் இடி முழங்கி அந்த இடி மந்திரவாதியின் தலையில் விழுந்து அவர் இறந்து விடுவார்.

இந்த படத்தில் விஜயகாந்த் மற்றும் பூர்ணிமா தேவி ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்த படம் இருவருக்குமே நல்ல பெயரை பெற்று தந்தது.

சிவாஜி, என்.டி.ஆர், ஜெமினி சிறப்பு தோற்றத்தில் நடித்த மர்மவீரன்…. படத்தின் தோல்விக்கு காரணம்…?

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க கர்நாடக மாநிலத்தில் உள்ள கடற்கரை ஓரத்தில் படமாக்கப்பட்டது. கடல் அலையின் ஓசையை பதிவு செய்து பின்னணி இசைக்கு அப்பவே இசையமைப்பாளர் சலில் சௌதுரி பயன்படுத்தியிருப்பார் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்.