தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும் அவரின் தொடக்க காலத்தில் பல கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். பல கேலி கிண்டல்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் தளபதி விஜய் தனது கடின உழைப்பின் மூலமாக இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். தளபதி விஜய் முதல் முதலில் தன் தந்தை இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விஜயின் அப்பாவான எஸ் ஏ சந்திரசேகர் கேப்டன் விஜயகாந்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தளபதி விஜயை நடிக்க வைத்ததன் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமாக துவங்கினார். அந்த வகையில் 1993 ஆம் ஆண்டு வெளியான செந்தூரப் பாண்டி திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் தம்பியாக தளபதி விஜய் நடித்திருப்பார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கேப்டன் விஜயகாந்த் மற்றும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வசந்த ராகம், சட்டம் ஒரு இருட்டறை போன்ற திரைப்படங்களில் சின்ன வயது விஜயகாந்த் கதாபாத்திரத்திற்கு தளபதி விஜய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்னதாகவே கேப்டன் விஜயகாந்த் படங்களில் தளபதி விஜய் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த வெற்றியே இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் நேற்று உடல் நல குறைவின் காரணமாக காலமானார். இந்த சூழ்நிலையில் கேப்டன் விஜயகாந்தை தளபதி விஜய் நேற்று இரவு 10 மணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பெரும் கூட்டங்களுக்கு மத்தியில் ரசிகர்களின் நெருக்கடிக்கு இடையில் தளபதி விஜய் மிகவும் சிரமப்பட்டு விஜயகாந்த் இருக்கு தன் இறுதி அஞ்சலியை செலுத்தினார். தொடர்ந்து பத்து நொடிகளுக்கு மேலாக விஜயகாந்தை பார்த்த தளபதி விஜய்க்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதன்பின் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்தித்தும், அவரது மகன்களை சந்தித்தும் தன் ஆறுதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்தார் தளபதி விஜய்.
அதை தொடர்ந்து தளபதி விஜய் தன் காரை நோக்கி சென்ற பொழுது அங்கிருந்த ரசிகர் ஒருவரால் தளபதி விஜய் தாக்கப்பட்டார். கூட்டத்தில் இருந்த கேப்டன் விஜயகாந்தின் ரசிகர் ஒருவர் மீது செருப்பை தூக்கி தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த செருப்பு தளபதி விஜயின் முதுகின் பின் விழுவதும் அவர் வேகமாக காரில் ஏறி செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகப்பட்டுள்ளது. தளபதி விஜய் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது வந்து ஆறுதல் கூறி கவனிக்காமல் இறந்தபின் வந்து அஞ்சலி செலுத்துவது முறையல்ல என்பது ரசிகர்களின் கோபமாக இருந்து வருகிறது.
மற்ற ஹீரோக்களுடன் போட்டி போடாமல் நேரடியாக இயக்குனரை தாக்கிய அயலான் படக்குழு!
தற்போது ரசிகர்களின் இந்த தீராத கோவத்திற்கு ஓர் அதிர்ச்சிகரமான அப்டேட் ஒன்றை கிடைத்துள்ளது. தளபதி விஜய் மற்றும் கேப்டன் இடையே ஆன உறவு அப்பா மகன் உறவு போல மிகவும் வலுவானது. கேப்டன் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நிலை நல குறைவின் காரணமாக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதை தெரிந்து கொண்ட தளபதி விஜய் ஆறு மாதங்களுக்கு மேலாக விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என அவரது குடும்பத்தாரிடம் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார். அதற்கு பதில் கிடைக்காத காரணத்தினாலேயே தளபதி விஜயால் விஜயகாந்தை சந்தித்து பேச முடியவில்லை.
தளபதி விஜய் போன்று அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தும், முறையான பதில் கிடைக்காததன் காரணமாக கேப்டன் விஜயகாந்தை சந்திக்க முடியவில்லை என பல பேட்டிகளில் கூறியுள்ளார். இதுபோன்று நடிகர் ராதாரவி, தியாகு என கேப்டன் விஜயகாந்த் உடன் நெருக்கமாக நட்புறவிலிருந்த நடிகர்களாலும் கேப்டன் விஜயகாந்த் பார்க்க முடியாத சூழல் எழுந்துள்ளது. இந்த நிலையில் அவரின் மறைவுக்கு பின் தற்பொழுது அனைத்து முன்னணி நடிகர்களும் நேரில் சென்று தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.