மற்ற ஹீரோக்களுடன் போட்டி போடாமல் நேரடியாக இயக்குனரை தாக்கிய அயலான் படக்குழு!

சின்னத்திரை தொலைக்காட்சியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக இப்படியாக முன்னேறி வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து நல்ல குடும்பக் கதைப்பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கைக்கு ஒரு வெற்றி படிக்கட்டை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை எடுத்து மாவீரன் திரைப்படம் 90 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மெகா ஹிட் படமாக அமைந்தது.

தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் உடன் இணைந்து அடுத்து ஒரு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. கடும் போராட்டங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கதாநாயகியாகவும் ஈஷா கோபிகர் வில்லியாகவும் நடித்துள்ளார். இன்று நேற்று நாளை எனும் படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் அயலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயனின் ரெமோ திரைப்படத்தின் ஆரம்ப விழா மற்றும் சக்சஸ் மீட் அந்த ஹோட்டலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவின் பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் அனைவரும் முன் அழுது தனது எமோஷனல் வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே கேளிக்கைக்கு ஆளானது. அதை தொடர்ந்து அயலான் திரைப்பட விழாவிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்கும் என ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த மேடையில் மிகத் தன்மையாக நடந்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அந்த மேடையில் நான் சினிமாவில் எந்த முன்னணி நடிகருடனும் போட்டி போடவில்லை, ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் நடித்து வருவதாக கூறினார். இந்த படத்தின் தயாரிப்பாளர் அயலான் திரைப்படம் தெலுங்கில் ஒரு பாகுபலி திரைப்படத்தை போல கன்னடத்தில் கேஜிஎப் திரைப்படத்தை போல தமிழில் அயலான் திரைப்படம் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்து வருகிறார். ஏலியனை நம்பி படம் எடுத்துள்ளதாகவும் தமிழில் இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெறும் எனவும் நம்பிக்கை இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

இயக்குனர் அட்லியை லாக் செய்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்! சம்பவத்திற்கு தயாரான ரசிகர்கள்!

அதை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ் அயலான் திரைப்படத்தை குறித்து நேர்மறையான கருத்துக்களை மேடையில் கூறி வந்தார். அதே நேரத்தில் எல்லாம் திரைப்படம் ஆல்ரெடி ஒரு பிளாக் பிளாஸ்டர் திரைப்படம் அது எங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு உண்மை. நாங்கள் ஏலியனை நம்பி படம் எடுத்துள்ளோம். ஆனால் இன்றைய திரையுலகில் பல இயக்குனர்கள் கத்தி, ரத்தம் படிந்த முகம், கஞ்சா, போதை பொருள் இவற்றை மையமாக வைத்து படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற வன்ம காட்சிகளில் நாங்கள் ஈடுபடவும் இல்லை, எங்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை என அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் படம் முழுக்க ஹீரோக்களை விதவிதமான துப்பாக்கிகளை வைத்து மற்றவரை கொலை செய்வது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக அமையுமா என்பது தெரியவில்லை. ஆனால் அயலான் திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பக் கதை கொண்ட திரைப்படம் குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்தப் பேச்சு தற்பொழுது சினிமா வட்டாரங்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அயலான் மேடையில் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனரின் பெயரை மட்டும் சொல்லாமல் அவரின் திரைப்படங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டியது அனைவரையும் மிரள வைக்கும் தருணமாக அமைந்திருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews