தமிழ்த்திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இளம் வயதில் சினிமா உலகிற்குள் நுழையும்போது என்னென்ன சவால்களைச் சந்தித்தார் என்பதை அவர் சொல்கிறார். பார்க்கலாமா…
நான் சும்மா மதுரையில இருக்கும்போது சேனா பிலிம்ஸ் மர்சூர் சார் என்கிறவரு வந்து நடிங்கன்னாரு. நான் அதை ஜோவியலா எடுத்துக்கிட்டு வந்து நடிக்கணும்னு வந்தேன்.
சரி நடிப்போமே அதனால என்னங்கறதுக்காக வந்தேன். இங்க நடிக்கும்போது அது வந்து பெரிய கம்பெனி தான். அதுல நடிக்கும்போது என்ன பண்ணிட்டாங்கன்னா அது ஒரு பெரிய நடிகர்னு பின்னால சொல்லப்பட்டது. உண்மை என்னன்னு எனக்குத் தெரியாது. எனக்குத் தமிழ் சரியா வரலன்னு சொல்லிட்டாங்க.
நானும் லொகேஷன்ல சூட்டிங் எடுக்கப்போறாங்கன்னு பேப்பர்ல நம்பிக்கிட்டே இருந்தேன். அந்த இடத்துல அதே சூட்டிங் நடக்கிறதாக வேற ஒரு ஹீரோன்னு சந்தேகம் வந்து இங்க வந்து கேட்டா அப்போ நான் டைரக்டர பார்க்க முடியல. புரொடியூசர பார்க்க முடியல.
மேனேஜர் சொல்றாரு… உனக்குத் தமிழ் வரல தம்பி. அதனால தான் உன்னை எடுக்கலன்னாரு. சரி. எனக்குத் தமிழ் வரலங்கறீங்க. நீங்க யாரைப் போட்டீங்க? அப்ப… தமிழ் பேசத் தெரியாத ஒரு நடிகரைப் போட்டு எனக்குத் தமிழ் வரலன்னு நீங்க எப்படி சொல்லலாம்? இல்ல தம்பி. இது ஒரு மாதிரியா இருக்குன்னாரு. இல்ல… இது மதுரை ஸ்லாங். நீங்க மாத்துங்கன்னு சொன்னா மாத்தப் போறேன்னு சொன்னேன்.
அப்பப் பார்த்தா நடிக்கிற நடிகர்கள் எல்லாருமே தமிழைக் கெடுத்துக்கிட்டுத் தான் இருக்காங்க. நீங்க எப்படி ஒத்துக்குறீங்கன்னு கேட்டேன். அப்படி எல்லாம் பேசாதீங்கண்ணேன். புதுமுகம்னு சொல்ல நான் வந்துட்டேன். அதுக்கு அப்புறம் ஒரு பிடிவாத குணம் ரொம்ப ஸ்ட்ராங்கா வந்து ஸ்பார்க் உருவானது. இதை விடக்கூடாது. சினிமா என்னன்ணு பார்க்கணும்.
சேனா பிலிம்ஸ் மர்சூர் தான் எனக்கு விஜயகாந்த்னு பேரு வச்சாரு. அவரு இன்னிக்கு இல்ல. அவரு வந்து திரும்பவும் ஒரு வழி பண்ணி எம்ஏ. காஜா கிட்ட அறிமுகப்படுத்தினாரு. அப்போ என்னோட ஒரிஜினல் பேரு வந்து விஜயராஜ். இவரு வந்து விஜயகாந்த்துன்னு மாத்துனாரு. இனிக்கும் இளமை முதல் படம். இதுல நான் வில்லனா நடிச்சிருந்தேன். கே.விஜயன் சாரு வந்து தூரத்து இடிமுழக்கம்கற படத்துல என்ன பிக்ஸ் பண்றாரு.
அவரு வந்து என் பேரை மாத்தணும்னு சொல்லி அமிர்தராஜ்னாரு. நான் வந்து ஒரு புது ஹீரோவ அறிமுகப்படுத்திருக்கேன். இவரு அமிர்தராஜ்னு போட்டாவைக் காட்டி சொன்னாரு. அவரு வந்து அமிர்தராஜ் இல்லங்க. விஜயகாந்த்னு பிரஸ்ல உள்ளவங்க சொல்ல சரி ரைட்டுன்னு அப்படியே வச்சிட்டாரு.
அப்படி வச்சித் தான் அந்தப் படம் ரிலீஸாச்சு. அந்தப் படம் ரிலீஸாகும்போது பல பிரச்சனை. சொல்ல விரும்பல. ஏன்னா அவருக்கும், அவரோட கதாநாயகனுக்கும் பிராப்ளம்னு பேப்பர்ல எழுதுனாங்க. இந்தப் படம் வெளியாகிறதுல காலதாமதம் ஆன உடனே விஜயகாந்த் ராசியில்லாத கதாநாயகன்னு ஒரு பேரு வர ஆரம்பிச்சிது. அதுக்கு இடையில பத்மபிரியாவோட நீரோட்டம்னு ஒரு படம் நடிச்சேன். அதுக்கு இடையில அகல் விளக்குன்னு ஒரு படம் ஷோபா கூட நடிச்சேன்.
அன்னக்கிளி செல்வராஜ் தான் டைரக்டரு. அப்போ அவரோட பொண்ணு ஊருக்குப் புதுசுன்னு ஒரு படம் ரொம்ப ஹிட்டாருந்தது. அசோக் புரொடியூசரோட படத்துல போய் நடிச்சேன். அந்தப் படம் மதுரையில எடுத்தாங்க. படம் ஓடல. அப்புறம் நூலறுந்த பட்டம்னு ஒரு படம் நடிச்சேன். அது வெளிவரல. இப்படி இருக்குற கால கட்டத்துல தான் எனக்கு வந்து ஒரு பேரு. விஜயகாந்த் நடிச்சா. படம் ஓடாது.
அந்த நேரம் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்துல சட்டம் ஒரு இருட்டறை படம் வந்தது. அப்போ அது நல்ல ஓட ஆரம்பிச்சுது. அப்போ தான் என்னை பலரும் புக் பண்ணாங்க. வேற மொழிகள்ல நடிக்கலாம். ஆனா எனக்க வேற லாங்குவேஜ் தெரியாது. காசுக்குத் தான் ஆசைப்படுவாங்க. நான் காசுக்கு என்னைக்குமே ஆசைப்பட்டதில்ல. அதனால வேற மொழிகள்ல நடிக்கணும்குற எண்ணம் எனக்கு இல்லை.