பாரதிராஜா நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நாயகியாகவும் குறிப்பாக போலீஸ் கேரக்டர்களில் நடித்த விஜயசாந்தி, அந்த கால லேடி சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார்.
நடிகை விஜயசாந்தியின் முன்னோர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அவர் சென்னையில் தான் தனது பள்ளி படிப்பை முடித்தார்.
20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!
சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட விஜயசாந்தி தனது 14வது வயதில் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் பாரதிராஜா நாயகனாக நடிக்க அருணா என்பவர் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜயசாந்தி முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில் அவரது கேரக்டர் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதனை அடுத்து அவர் தெலுங்கு படங்களில்தான் கவனம் செலுத்தினார். தமிழில் நாயகி வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு படத்தில் நடித்த அவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக 1990களில் தெலுங்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய சிரஞ்சீவிக்கு இணையாக ஆக்சன் படங்களில் விஜயசாந்தி நடித்தார். அவர் ஆக்சன் படங்களில் டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து ஆக்சன் படங்கள், போலீஸ் கேரக்டர்கள் என விஜய் சாந்திக்கு வந்ததை அடுத்து அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகியது. தெலுங்கில் அவர் மிகப்பெரிய ஸ்டாராக கருதப்பட்டார். இருப்பினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்கள் நடித்து வந்தார். ரஜினிகாந்த் உடன் ‘மன்னன்’, கமல்ஹாசனுடன் ‘இந்திரன் சந்திரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவரது கவனம் முழுவதும் தெலுங்கில் மட்டும் இருந்தது என்பதால் தெலுங்கில் தான் அதிக திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் விஜயசாந்தி கடந்த 1988ஆம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பல அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி விற்பனை செய்துள்ளார்.
தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய ராதிகாவின் முன்னாள் கணவர்.. பிரதாப் போத்தனின் அறியாத பக்கங்கள்..!
விஜயசாந்தி தெலுங்கில் பிரபல நடிகை இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டார். 1998ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருந்த சோனியா காந்தி ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா என்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். இதனை அடுத்து பாஜக சார்பில் விஜயசாந்தி அவரை எதிர்த்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சோனியா காந்தி அந்த தொகுதியில் போட்டியிடவில்லை. அவர் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கிய விஜயசாந்தி அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் விஜயசாந்தி தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. சந்திரசேகர ராவ் கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
கோடிக்கணக்கில் சம்பாத்தியம்.. சில படங்கள் தயாரிப்பு.. நடுத்தெருவுக்கு வந்த பிஎஸ் வீரப்பா..!
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சிக்கு விஜயசாந்தி தாவினார். அவர் அரசியலில் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சினிமாவில் அவர் சாதித்தது ஏராளம். அவரது படங்கள் இன்றும் தொலைக்காட்சியில் வெளியாகும் போது ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.