தமிழ் சினிமாவில் வைகைப்புயலாக கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி நிற்பவர் நடிகர் வடிவேலு. தன்னுடைய உடல்மொழியால் அனைவரையும் சிரிக்க வைப்பவர். ஆரம்பத்தில் சாதாரண துணை நடிகராக வந்த வடிவேலு அவருடைய கடின உழைப்பால் இன்று ஒரு மாபெரும் நகைச்சுவை நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
நடிகர் ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகமானவர் வடிவேலு. கவுண்டமணி , செந்தில் இவர்கள் பீக்கில் இருக்கும் போது சினிமாவில் நுழைந்தவர். அதன் பின் அவர்கள் பாணியை முற்றிலுமாக மாற்றி தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையில் பின்னி பிடலெடுத்தார்.
தொடர்ந்து இவர் நடிக்காத படங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கினார். அனைத்து நடிகர்களுடனும் இவரின் கூட்டணியில் படங்கள் வெளிவந்தன. அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வந்தார். ஆனால் அப்போது உள்ள வடிவேலு இப்போது இல்லை என்று அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் வருந்தி பல பேட்டிகளில் புலம்பி வருகின்றனர்.
ஆனால் அவருடைய குணமே வேறு என்று மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பிரபுதேவாவின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் வில்லு. இந்தப் படத்தில் விஜய் , வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது விஜயை பார்த்து பேசச் சொன்னால் வடிவேலு வேறு எங்கேயோ பார்த்தே பேசிக் கொண்டிருந்தாராம்.
பிரபுதேவா நிறைய தடவை கட் என்று சொல்லியும் கேட்காத வடிவேலு நான் டப்பிங்கில் மேச் பண்ணிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கடுப்பில் பிரபுதேவா இங்கு நீங்க டைரக்டரா இல்ல நான் டைரக்டரா என கேட்டு அன்று நடக்க இருந்த படப்பிடிப்பே நின்று போய்விட்டதாம். அதன் பின் சமாதானப்படுத்தி படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர்.