நடிகர் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக அப்டேட் இல்லாமல் ரசிகர்கள் ஏங்கித் தவித்து வந்த ஒரு திரைப்படம் தான் ‘விடாமுயற்சி’. இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு எந்த அப்டேட்களும் வெளியாகாமல் இருந்து வந்தது.
தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமாருடன் திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இதன் டீசரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள்
பிரேக் டவுன் என்ற ஒரு ஆங்கில படத்தின் கருவில் விடாமுயற்சி உருவாகி உள்ளதாகவும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் விடாமுயற்சி டீசரின் அடிப்படையில் சாலை ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தனது மனைவி திரிஷாவை திடீரென அஜித் குமார் தொலைப்பது போன்றும் அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் தான் கதை என்றும் தெரிகிறது.
இந்த கதை பிரேக் டவுன் என்ற ஆங்கில திரைப்படத்துடன் ஒத்துப் போவதால் அதன் அதிகாரபூர்வ ரீமேக்காக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அஜித்தின் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
‘Sawadeeka, Sawadeeka’
இதற்கு மத்தியில், விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் சிங்களான ‘Sawadeeka’ சமீபத்தில் வெளியாகியிருந்தது. அனிருத் திசையில் ஆண்டனி தாசன் பாடியிருந்த இந்த பாடலில் அஜித்தின் நடனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அப்படி ஒரு சூழலில் ‘Sawadeeka’ என்ற வார்த்தை அஜித் குமாரின் விடாமுயற்சி பாடலுக்கு முன்பாக நடிகர் விஜய் நடிப்பில் உருவான வில்லு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். வில்லு படத்தில் வரும் ஒரு காட்சியில் நயன்தாராவுக்கு தன்னை சுற்றி இருக்கும் அனைத்து இடங்களிலும் விஜய் இருப்பது போன்ற உணர்வு வரும்.
அப்போது தொலைக்காட்சியில் வரும் ஒரு காமெடி சீனில் நடிகர் விஜய் டென்னிஸ் வீரராக தோன்றுவார். அந்த சமயத்தில் ‘Sawadeeka, Sawadeeka’ எனக் கூற, தற்போது அஜித் படத்திலும் அதே வார்த்தையில் முதல் பாடல் வெளியாகி உள்ளது. மேலும் Sawadeeka என்ற வார்த்தை, தாய்லாந்து மொழியின் படி வணக்கம் என்ற பொருள்படுவதாகவும் கூறப்படுகிறது.