Soundhariya and Vijay Sethupathi : பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே விஜய் சேதுபதி தனது பேச்சால் பார்வையாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்க, பாரதி எபிசோடுகளிலும் பட்டையை கிளப்பி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வாரத்திற்குள் பிரச்சனையை உண்டு பண்ணி எந்த போட்டியாளர்களாலும் விஜய் சேதுபதியை எதிர்கொள்ள முடியாமல் அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறினர்.
அந்த அளவுக்கு தனது கிடுக்குப்பிடி கேள்விகளால் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி, ரசிகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டுக்களை பெற்றிருந்தார். மற்ற டாஸ்க் நடைபெறும் நாட்களை விட வார இறுதியில் விஜய் சேதுபதி எப்போது வருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு அவர் கொடுத்துவிட்டார்.
அந்த அளவுக்கு குறுகிய நேரத்தில் கொஞ்சமாக பேசி தாக்கத்தை உண்டு பண்ணும் விஜய் சேதுபதி கமலுக்கு நிகராக உள்ளதாகவும் பலர் பாராட்டி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் போட்டியாளர் சௌந்தர்யாவையும் தனது கேள்வியால் விஜய் சேதுபதி மடக்கிய விஷயம் வெகுவாக பலரை கவர்ந்து வருகிறது.
தர்ஷிகாவின் கேப்டன்சி பற்றி பேசி தானாகவே போய் வசமாக விஜய் சேதுபதியிடம் சிக்கிக் கொண்டார் சவுந்தர்யா என்று தான் சொல்ல வேண்டும். “தர்ஷிகா அவருடைய கேப்டன்சி வேலையை சிறப்பாக தான் செய்தார். பெண்கள் அணிக்கு அதிக ஆதரவாக இருந்தார்” என கூறுகிறார். அப்போது குறுக்கிடும் விஜய் சேதுபதி, “பெண்களுக்கு ஆதரவாக இருந்தார் என நீங்கள் கூற வருகிறீர்களா. ஒரு கேப்டனா நடுநிலையான இருந்தாங்களா, இல்ல பெண்கள் சைடுல இருந்தாங்களா?” என கேட்கிறார்.
இதற்கு மிக கவனமாக பதில் சொல்லும் சவுந்தர்யா, “எங்க சைடு இருந்த மாதிரி தோணுச்சு. ஆனா எல்லா விஷயத்துலயும் சொல்லல” என கூறுகிறார். சவுந்தர்யா பட்டும் படாமல் பேச, “நீங்க உங்க பக்கம் பாதுகாப்பா பேசணும்னா எவ்ளோ நேரம் பேசுவீங்க?. நான் கேம் ஆடும் போது பாக்குறேன். நேத்தும் உங்க சத்தத்தை காணோம். பேசும் போது பேச தெரியாதுனு எஸ்கேப் ஆகிடுறீங்க. ஆனா நல்லா தான் பேசுறீங்க. இப்போ தெளிவா பதிலை சொல்லுங்க” என விஜய் சேதுபதி கேட்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் சவுந்தர்யா, “நடுநிலையாக இருந்ததை விட தர்ஷிகா பெண்கள் அணிக்கு கொஞ்சம் அதிகமாக ஆதரவாக இருந்தார்” என உண்மையையும் கடைசியில் உளறி வைக்கிறார். இதனிடையே, முதல் வார இறுதியில் முதல் ஆளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Fatman ரவீந்தர் வெளியேறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.