பிக் பாஸ் 8: சவுந்தர்யாவ பாத்து கத்துக்கிட்டீங்களா?.. மூஞ்சுக்கு நேராக கேள்வி கேட்ட விஜய் சேதுபதி.. திணறிய ஆனந்தி..

பிக் பாஸ் வீட்டில் புதிதாக ஆறு போட்டியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நுழைந்திருந்த நிலையில், முதல் சில தினங்கள் அவர்களது ஆட்டம் படுமோசமாக அமைந்திருந்தது. மஞ்சரி, ராணவ், ரயான், சிவகுமார், வர்ஷினி, ரியா…

vijay sethupathi roast arun about ananthi

பிக் பாஸ் வீட்டில் புதிதாக ஆறு போட்டியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நுழைந்திருந்த நிலையில், முதல் சில தினங்கள் அவர்களது ஆட்டம் படுமோசமாக அமைந்திருந்தது. மஞ்சரி, ராணவ், ரயான், சிவகுமார், வர்ஷினி, ரியா என வந்த ஆறு பேருமே சொதப்பலாக விளையாட, இதற்கு ஏற்கனவே இருந்த போட்டியாளர்களே சிறப்பானவர்கள் என பார்வையாளர்கள் தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

அதே நேரத்தில் நாட்கள் செல்ல செல்ல மற்ற பழைய போட்டியாளர்களை பற்றி தெரிந்து கொண்ட புதிய போட்டியாளர்கள் தங்களின் கேமையும் ஆடத் தொடங்கி விட்டனர். பெண்கள் அணியில் மஞ்சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, கடந்த வாரம் ஸ்கூல் டாஸ்க்கில் பிரின்சிபலாக இருந்த வர்ஷினி, தற்போது பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார். இதேபோல ஆண்கள் அணியிலும் ராணவ் மற்றும் ரயான் ஆகிய இருவரும் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக விளையாடி வருகின்றனர்.

போர் அடிக்க வைக்கும் சிவகுமார்

ஆனால் அதே நேரத்தில் மற்றொரு புது வரவான சிவகுமார் தனது ஆட்டத்தை பல இடங்களில் சிறப்பாக விளையாடினாலும் ஏதாவது பேசும் போது அதிகம் போர் அடிக்கும் வகையில் பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்கிடையே தீபக்குடன் ஒரு மோதலில் சிவகுமார் ஈடுபட்டிருந்ததும் அதிகம் பேசுபொருளாக மாறி இருந்தது.
Bigg Boss 8 School Task

அப்படி ஒரு சூழலில், வார இறுதியில் தோன்றிய விஜய் சேதுபதி, கடந்த வார ஸ்கூல் டாஸ்க்கில் வாட்ச் மேனாக இருந்த சிவகுமாரிடம் டாஸ்க் பற்றி சில விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்போது கடந்த வாரம் சம்பவம் குறித்து சிவகுமார் பேசி கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஆனந்தியோ, மஞ்சரியின் தோளில் படுத்தபடி சிவகுமார் பேசுவதை கவனித்து கொண்டிருக்கிறார்.

சவுந்தர்யா மாதிரி பண்றீங்ளா..

இதனை கவனித்த விஜய் சேதுபதி, “கேமரா ஷாட்டை ஆனந்திக்கு வைங்க” என கூறியதும் சுதாரித்து கொள்ளும் ஆனந்தி, உடனடியாக எழுந்து கொள்கிறார். தொடர்ந்து பேசும் அவர், “சிவகுமார் பேசுறதை பாத்து தான் சிரிச்சிட்டு இருந்தேன்” என கூறுகிறார். அதற்கு விஜய் சேதுபதியோ, “இத சவுந்தர்யாகிட்ட இருந்து கத்துக்கிட்டீங்களா. அவங்க தான் மத்தவங்க பேசும்போது படுத்துகிட்டு கேட்டுட்டே இருப்பாங்க. அவங்ககிட்ட இருந்து இன்ஸ்பயர் ஆகிட்டீங்களா?” என வேடிக்கையாக கேட்டதும் இதற்கு மறுப்பும் தெரிவிக்கிறார் ஆனந்தி.
Shivakumar in Bigg Boss8

இதன் பின்னர் பேசும் விஜய் சேதுபதி, “சில நேரம் நாம பேசுறது சுவாரஸ்யமா இல்லாம போனா இப்படி தான் சாஞ்சுடுவாங்க. அதை கொஞ்சம் பாத்துக்கோங்க சிவா” என சிவகுமாருக்கு தனது அறிவுரையையும் விஜய் சேதுபதி வழங்குகிறார். ஏற்கனவே பல போட்டியாளர்கள் சிவகுமார் அதிகமாக பேசுவதாக குறிப்பிட்டு வந்த நிலையில், அதனை விஜய் சேதுபதியும் கவனித்து அறிவுரை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.