பிக் பாஸ் 8: நான் ஒன்னும் போட்டியாளர் இல்ல.. என்கிட்ட உங்க வேலைய காமிக்காதீங்க.. ரவீந்தருக்கு சேதுபதி சொன்ன பாடம்..

By Ajith V

Published:

Vijay Sethupathi vs Fatman Ravinder : பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இந்த சீசனில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய் சேதுபதி, முதல் வார இறுதியின் முதல் எபிசோடில் என்ட்ரி கொடுத்து செய்த விஷயங்கள் அட்டகாசம் என்று தான் சொல்ல வேண்டும். போட்டியாளர்களுடன் அதிக நேரம் தேவையில்லாமல் எந்த விஷயங்களையும் உரையாடாத விஜய் சேதுபதி தானும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அனைத்து போட்டியாளர்களுக்கும் சம வாய்ப்பை கொடுத்தது மட்டுமில்லாமல், பிக் பாஸ் வீட்டில் இருந்த டாஸ்க் மற்றும் பிளான் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பற்றி நிறைய விஷயங்கள் பேசியிருந்தார்.

அந்த வகையில் ஃபேட்மேன் ரவீந்தருடன் விஜய் சேதுபதி பகிர்ந்து கொண்ட பல விஷயங்கள் அதிக கவனம் பெற்று இருந்தது. 18 போட்டியாளர்களில் ஒருவராக காலடி எடுத்து வைத்திருந்தார் Fatman ரவீந்தர். அதுவும் முதல் போட்டியாளராக உள்ளே வந்த ரவீந்தர், பிக் பாஸ் போட்டியாளர்களை ஒரு குடும்பமாக பார்க்காமல் சக போட்டியாளராக கணித்து அவர்களை எப்படி திசை திருப்ப வேண்டும் என்பதிலும் ஒவ்வொரு டாஸ்கின் போது எப்படி தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதிலும் சிறப்பாக ரவீந்தர் நிலை நிறுத்தி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறந்த ரிவ்யூவராக இருந்த ரவீந்தரை சக போட்டியாளர்கள் இடத்தில இருந்து பார்க்கும் போது அவர் எடுத்த சில முடிவுகள் நிச்சயம் எதிர் கருத்துக்களை தான் உருவாக்கி இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதி வந்திருந்த போது கூட ரவீந்தரை பற்றி பல விஷயங்களை அவர் பேசியிருந்தார். சில விஷயங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்த விஜய் சேதுபதி சில நேரங்களில் நேரடியாகவே அவரை கலாய்த்தும் பேசியிருந்தார்.

அப்போது விஜய் சேதுபதியின் கேள்விக்கு பதில் பேசிக்கொண்டிருந்த ரவீந்தர், ” நான் டபுள் பெட்ல படுத்தா என் பக்கத்தில் படுத்து இருக்குறவன் நசுங்க கூடாதுன்னு நான் நினைப்பேன். நான் குறட்டை விட்டா அவனுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நெனப்பேன். அதுதான் என்னோட கம்ஃபர்ட். ஆனா இடமே கிடைக்காட்டியும் படுக்கணும்னு நினைச்சுட்டு தான் நான் உள்ள வந்தேன்.

அதுதான் என்னோட கேம் பிளான். இவங்க என்ன மனசுல நினைப்பாங்க அப்படிங்குறது முக்கியமில்ல” என ரவீந்தர் பேசிக்கொண்டே இருக்க குறுக்கே பேசிய விஜய் சேதுபதி, “நீங்க ரொம்ப நேரம் பேசுறீங்க சார். எனக்கு போர் அடிக்குது. எனக்கு ஒன்னு புரியல. விஷயம் என்னனு நேரடியா சொல்லுங்க. நான் உங்களை மாதிரி ஒரு போட்டியாளர் கிடையாது.

என்னை தயவு செஞ்சு சமரசம் பண்ண பாக்காதீங்க. நீங்க சொல்ல வந்த விஷயத்தை ஷார்ட்டா சொல்லிட்டு முடிச்சிடுங்க” எனக் கூறியதும் அரங்கத்தில் இருந்த அனைவருமே கைத்தட்ட தொடங்கி விட்டனர். பிக் பாஸ் போட்டியாளர்களை போல விஜய் சேதுபதியிடம் பேச முயற்சித்து ரவீந்தர் பல்பு வாங்கிய விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.