பிக் பாஸ் 8: உள்ள போயும் இதே வேலை தானா.. பாரபட்சமே பாக்காம ரவீந்தரை கலாய்த்த விஜய் சேதுபதி..

Vijay Sethupathi and Fatman Ravinder : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த வாரம் முதல் எலிமினேஷன் இருக்கும் என்றும் தெரிகிறது. அந்த வகையில், அருண்…

vijay sethupathi and Fatman Ravinder

Vijay Sethupathi and Fatman Ravinder : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த வாரம் முதல் எலிமினேஷன் இருக்கும் என்றும் தெரிகிறது. அந்த வகையில், அருண் பிரசாத் மற்றும் Fatman ரவீந்தர் ஆகிய இருவரும் Dangerous Zone-ல் இருக்கும் சூழலில், யார் வெளியேறுவார் என்பது பற்றி பல விதமான கருத்துக்களை பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரவீந்தர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறுவார் என உறுதியான தகவல் ஒன்று பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியுள்ள ஒருவரை ஏன் முதல் வாரத்திலேயே வெளியேற்ற வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் போட்டியாளர்களை சந்தித்திருந்த விஜய் சேதுபதி, கடந்த ஒரு வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சனைகள் குறித்து நேரடியாக தனது கருத்துக்களை பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டிருந்தார். அப்படி ஒரு சூழலில், அவர் Fatman ரவீந்தருடன் பேசிய விஷயங்களும் அதிகம் வைரலாகி வருகிறது.

அப்போது விஜய் சேதுபதியிடம் பேசிய ரவீந்தர், “எனக்கு இந்த வீட்டில் இத்தனை பேருடன் சேர்ந்திருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது ஒரு கொள்கையுடன் வந்தேன். அதனை ஒரு நாளும், ஒரு நிமிடமும் கூட வீணடிக்காமல் சந்தோசமாகவும் விளையாடி மிக சிறப்பாக செய்து விட்டேன் என நினைக்கிறேன்.

இந்த வீட்டிற்குள் என்னுடைய பெரிய புரிதல், ஒவ்வொரு வாரத்தையும் இறுதி வாரமாக எடுத்து நினைத்ததை போல விளையாட வேண்டும் என்பது தான். 106 நாட்கள் இருக்கிறது என நினைத்து கொஞ்ச நாள் கழித்து அனைவரிடமும் பழகலாம் என இல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே அனைத்து போட்டியாளர்களுடனும் சந்தோசமாக நான் கேம் ஆடியதாக உணர்கிறேன்” என்றார்.

இதன் பின்னர் பேசிய விஜய் சேதுபதி, “நீங்கள் வீட்டுக்குள் வந்ததும், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பிக் பாஸோட சரியான போட்டியாளர் நான் தான் என்று சொன்னீர்கள். செம பன்ச் லைன் அது. நீங்கள் உங்களை மிக பாசிட்டிவாக எடுத்து கொண்டு ஆடுகிறீர்கள். அதே போல, இந்த வாரத்துடன் நீங்கள் வெளியேற போவதாக ஒரு வார்த்தையை சொன்னீர்கள் அல்லவா. அது எப்படி சொன்னீங்க?” என கேட்கிறார்.

இதற்கு பதில் சொல்லும் Fatman ரவீந்தர், “நான் பண்ண சேட்டை அப்படி சார்” என சிரித்துக் கொண்டே கூறுகிறார். மறுகணமே, “உள்ள போயும் நீங்க ரிவியூரா இருக்கீங்களா சார்?” என கேட்டதும் அரங்கமே சிரிக்கத் தொடங்கி விடுகிறது. தொடர்ந்து பேசும் விஜய் சேதுபதி, “ஆனாலும் நீங்க ரொம்ப சுவாரஸ்யமான பெர்சனாலிட்டி” என ரவீந்தரை பாராட்டவும் செய்கிறார்.

கடந்த 7 சீசன்களையும் ரிவ்யூ செய்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த Fatman ரவீந்தர் போட்டியாளராகவும் களமிறங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.