அப்படி நான் செய்வேன்னு மட்டும் நெனச்சுடாதீங்க.. முதல் நாளிலேயே விஜய் சேதுபதி கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்..

தமிழில் தற்போது பிக் பாஸ் 8 சீசன் ஆரம்பமாகி உள்ள நிலையில், மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த முறை களமிறங்கி உள்ளனர். விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களும், இன்னொரு பக்கம் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை…

vijay sethupathi warning to bb contestants

தமிழில் தற்போது பிக் பாஸ் 8 சீசன் ஆரம்பமாகி உள்ள நிலையில், மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த முறை களமிறங்கி உள்ளனர். விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களும், இன்னொரு பக்கம் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை மூலம் கவனம் ஈர்த்தவர்களும் வழக்கம் போல இந்த முறையும் இடம்பெற்றுள்ளனர்.

சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், னந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாந்த் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். இந்த தடவை முதல் முறையாக Boys Vs Girls என்ற பெயரில் 9 பெண்களும், 9 ஆண்களும் என இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், முந்தைய 7 சீசன்களை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவர் எந்த விதத்திலும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக இல்லாமல் தவறு செய்தால் தட்டி கேட்பவர். இந்த முறை அவர் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டதால் அவரது இடத்தி்ல் மற்ற நடிகர்களால் சிறந்த முறையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி முதல் எபிசோடிலேயே கலக்கலாக தனது பணியை செய்துள்ளதால் கமலுக்கு நிகராக பெயர் எடுப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் சீரியல் நடிகர் சத்யா உள்ளே வந்த போது அவரிடம் விஜய் சேதுபதி சொன்ன விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது. வெப் சீரியஸ் மற்றும் சீரியல்களில் நடித்து பெயர் எடுத்த நடிகர் சத்யா, பிக் பாஸ் 8 சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். இவர் ஏற்கனவே பிக் பாஸ் 2 வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்த பிரபல பாடகி ரம்யா என்எஸ்கேவின் கணவர் ஆவார்.

இவர் மேடைக்கு வந்ததும் விஜய் சேதுபதியுடன் சில விஷயங்களை உரையாடி இருந்தார். “எப்படிணா இவ்வளவு எதார்த்தமாக மாறாமல் அப்படியே இருக்கிறீர்கள்?” என விஜய் சேதுபதியிடம் சத்யா கேட்டதும் அரங்கத்தில் இருந்த அனைவரும் கைத்தட்ட தொடங்கி விட்டனர். ‘சாலிகிராமத்தில் உங்களை சாதாரண ஒரு டான்ஸராக இருக்கும் போது பார்த்தேன். அதன் பின்னர் இப்போது பென்ஸ் காரில் வருவதும் பார்த்தேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை அந்த எதார்த்தம் அப்படியே இருக்கிறது எப்படி அதை தொடர்கிறீர்கள்?’ என வியப்புடன் மீண்டும் கேட்டார்சத்யா.

இதற்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி, ‘வேஷம் போடுவதற்காக தான் காசு வாங்குகிறேன். சொந்த வாழ்க்கையில் வேஷம் போட வேண்டுமா என்ன?’ என கூறியதும் அனைவரும் மீண்டும் கைத்தட்ட தொடங்கி விட்டனர். தொடர்ந்து பேசி வந்த விஜய் சேதுபதி, ‘உள்ளே சென்றதற்குப் பின் ஜாலியாக விளையாடுங்கள். நான் இப்போது அன்பாக பேசுகிறேன் என்பதற்காக தொடர்ந்து அப்படியே ஜாலியாக இருப்பேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.