பிக் பாஸ் என வரும் போது நிகழ்ச்சி ஆரம்பமாகும் முதல் நாளில் ஒரு குறிப்பிட்ட போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைவார்கள். இதனைத் தொடர்ந்து ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென சில போட்டியாளர்களை வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் உள்ளே அனுப்புவார்.
அந்த வகையில் இந்த முறையும் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடுவே என்ட்ரி கொடுத்திருந்தனர். வர்ஷினி, ரியா, மஞ்சரி, சிவராஜ், ரயான் மற்றும் ராணவ் உள்ளிட்ட ஆறு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர். இதில் வர்ஷினி, ரியா மற்றும் சிவராஜ் ஆகிய மூன்று பேர் வெளியேறிவிட்டனர். தற்போது மஞ்சரி, ரயான் மற்றும் ராணவ் ஆகிய மூன்று பேர் மட்டும் தான் தொடர்ந்து அசத்தலாக ஆடி வருவதுடன் பார்வையாளர்கள் வரவேற்பையும் அதிகமாக பெற்றுள்ளனர்.
மனமுடைந்த மஞ்சரி
இந்த மூன்று பேர் மீது ஒரு சில போட்டியாளர்கள் அன்புடனும், ஆதரவுடனும் இருந்தாலும் இன்னொரு பக்கம் இவர்கள் மீது ஒருவித வெறுப்பையும் பலர் காண்பித்து தான் வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் மிக அறிவுப்பூர்வமாக பல விஷயங்களை எதிர்கொள்ளும் மஞ்சரியை அன்ஸிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். அவர் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார் என பல சம்பவங்களை குறிப்பிட்டு அன்ஸிதாவே நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால் எப்போதும் பலமாக இருக்கும் மஞ்சரி, கடந்த வாரத்தில் உடைந்து போனதாக தெரியும் நிலையில் அவரிடமே இதுபற்றி பேசி இருந்தார் விஜய் சேதுபதி. “யாரு உங்க கிட்ட கேட்கலன்னா என்ன. நான் கேட்கிறேன் மா. எப்படி இருக்கீங்க?. நல்லா இருக்கீங்களா?” என மஞ்சரியிடம் விஜய் சேதுபதி ஆறுதலாக சொன்னதும் அரங்கமே ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டது.
ஆறுதல் சொன்ன விஜய் சேதுபதி
இதனால் மஞ்சரி முகத்திலும் ஒருவித உற்சாகம் தெரிய, தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, ‘யார் பேசினால் என்ன, பேசாமல் போனால் என்ன. நீங்கள் தான் பலமான போட்டியாளராச்சே. நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க’ என்றும் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் மஞ்சரி, ‘என்னிடம் யாரும் பேசாமல் போனால் கூட பரவாயில்லை. ஆனால் நான் நடிப்பதாக கூறுவது தான் வருத்தமாக இருக்கிறது’ என்றும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து அவருக்கு ஆறுதல் சொல்லும் விஜய் சேதுபதி, வந்த நாளில் தன்னை அதிகமாக விமர்சித்து வந்த நிலையில் அவர்களை எல்லாம் கடந்து வந்ததை பெரிதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் இந்த சின்ன விஷயத்திற்காக எல்லாம் வருத்தப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கிறார்.