பிக் பாஸ் 8 : நீங்க ஃப்ராடு.. போட்டியாளரை நேரடியாக சாடிய விஜய் சேதுபதி.. என்ன நடந்தது?..

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர அதிகபட்சமாக 20 நாட்கள் வரை உள்ளதாகவே தெரிகிறது. இதனால் ஒவ்வொரு நாட்களும் இனி பட்டாசாய் வெடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அந்த வகையில் கடந்த வாரமும்…

Vijay Sethupathi Questions Vishal

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர அதிகபட்சமாக 20 நாட்கள் வரை உள்ளதாகவே தெரிகிறது. இதனால் ஒவ்வொரு நாட்களும் இனி பட்டாசாய் வெடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அந்த வகையில் கடந்த வாரமும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏராளமான பிரச்சனைகள் நடந்திருந்தது. முத்துக்குமரனால் வந்த கேப்டன்சி டாஸ்க் சர்ச்சை, அன்ஸிதா – மஞ்சரி மோதல், பிஸிக்கல் டாஸ்க் பிரச்சனை என நிறைய அரங்கேறி விட்டது.

அதில் மற்றொரு முக்கியமான பிரச்சனை தான் ராணவ் கையில் காயம் ஏற்பட்டது. டாஸ்க்கிற்கு நடுவே கீழே விழுந்ததில் ராணவிற்கு காயம் ஏற்பட, இதனை பலரும் நம்பவே இல்லை. மருத்துவர்களை சென்று சந்தித்து விட்டு வந்தும் அவர் நடிப்பதாக சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டிருந்தனர். அப்படி ஒரு சூழலில் வார இறுதி எபிசோடில் தோன்றிய விஜய் சேதுபதி, இது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

பிராங்க் செய்தாரா ராணவ்?

ராணவ் கையில் கட்டு போட்டிருந்தும் அவர் பிராங்க் செய்கிறார் என பலரும் நினைக்க, ராணவ் நடித்தததாக யார் உணர்கிறார்கள் என்ற கேள்வியை விஜய் சேதுபதி முன் வைக்கிறார். அந்த சமயத்தில் முத்து, சவுந்தர்யா உள்ளிட்டோர் எழுந்து நிற்க, கேப்டனாக இருந்த விஷாலோ எழும்பலாமா, வேண்டாமா என்பது போல சைகை காட்டிக் கொண்டிருந்தார்.
Raanav Injury

இதனை கவனித்த விஜய் சேதுபதி, “நீங்க எழுந்து நிற்க போகிறீர்களா இல்லையா?” என கேட்க, ‘நான் எழுந்திருக்க தான் போகிறேன்’ என விஷால் சொல்கிறார். பின்னர் பேசும் விஜய் சேதுபதி, “ஏன் எழுந்திரிக்க போவது போல நடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இப்படி ஒரு ஃபிராடு கேப்டனை நான் பார்த்ததே கிடையாது” என்றதும் அரங்கத்தில் இருந்த அனைவருமே கைதட்ட தொடங்கி விட்டனர்.

மாட்டிக்கொண்ட விஷால்

விஷாலின் கேப்டன்சி மீது நிறைய பிரச்சனைகள் இருந்தது பற்றி போட்டியாளர்களே குறிப்பிட, அதைத் தான் விஜய் சேதுபதியும் மறைமுகமாக குறிப்பிட்டார் என தெரிகிறது. இதன் பின்னர், ராணவ் நடித்தது போல தனக்கு தோன்றியதற்கான காரணத்தை சொன்ன விஷால், “நான் தான் அவனை மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். அப்போது அவரது நிலைமை என்ன என மருத்துவர்களிடம் கேட்டேன். வெளியே அனைவரும் பயந்து கொண்டு இருந்தார்கள். இதனால் ராணவ் நிலை என்ன என்பது வார இறுதியில் தான் தெரிய வரும் என்றும் கூறிவிட்டேன். இதில் வார இறுதி என என் வாயில் இருந்து தெரியாமல் வந்து விட்டது. நிஜமாவே ராணவிற்கு அடிபட்டது போல என்னால் உணரவும் முடியவில்லை.” என்றார்.
VJ Vishal

வார இறுதி என விஷால் குறிப்பிட்டது விஜய் சேதுபதி தோன்றுவதை வைத்து ராணவ் பிராங்க் செய்தாரா இல்லையா என்பதை குறிப்பிட்டு தான் என ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், விஷால் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.