உலக சுற்றுப் பயணத்திற்கு தயாரான விஜய்! ஒரே அதிரடி தான்..

Published:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தளபதி அவர்கள் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து அடுத்த படம் நடிக்க உள்ளார் என்ற செய்தி தெரிந்ததில் இருந்து இன்று வரை படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

விஜய்யின் 67வது படமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா களமிறங்கியுள்ளார். மேலும் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஸ்கின் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான நான் ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 18 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

தற்பொழுது லியோ திரைப்படத்தில் புரமோஷன் குறித்த மாஸான தகவல் வெளியாகியுள்ளது. லியோ புரமோஷன் சாதாரணமாக சென்னையில் மட்டும் நடத்தாமல் ஒட்டுமொத்தமாக உலக அளவில் இந்த படத்தின் புரமோஷன் நடத்த படக்குழுவினர் வேற லெவலில் பிளான் போட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பல இடங்களில் தளபதி விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அங்கு வெளியாகும் திரைப்படம் எல்லாம் வசூலில் வேற லெவலில் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட சமந்தா! ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள்!

இந்தநிலையில் தளபதி விஜய் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு எல்லாம் நேராக சென்று தன்னுடைய ரசிகர்களை எல்லாம் பார்த்து வந்தால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதாவது 100 கோடி வசூல் என எல்லா நடிகர்களும் போட்டி போடும் நேரத்தில் தளபதி விஜய் அவர்கள் ஒரு பக்கம் மாணவர்களுக்கு பரிசு, அதன்பின் பசியோடு இருபவர்களுக்கு எல்லாம் விருந்தகம் என நிறைய நல்ல திட்ட உதவிகள் செய்து மக்கள் மனதில் உச்சத்தில் இடம்பிடித்து வருகிறார்.

தற்பொழுது துபாய், மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாட்டில் புரொமோஷன்கள் நடத்தி அங்குள்ள ரசிகர்களை தளபதி விஜய் பார்த்து வந்தால் இந்த ஒரு திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

 

மேலும் உங்களுக்காக...