தளபதி விஜய் இன்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய நிலையில் அடுத்த தேர்தலில் விஜய் நேரடியாக களம் இறங்கப் போவது உறுதி என்றும் ஆனால் தமிழகத்தில் அல்ல என்றும் செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் பனையூரில் ஊரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தார் என்றும் இந்த ஆலோசனையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து நிர்வாகிகளிடம் இருந்து தகவல் கசிந்ததாகவும் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விஜய் நேரடியாக அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் விஜய் போட்டியிடுவது தமிழகத்தில் அல்ல என்றும் புதுச்சேரியை தான் முதலில் குறி வைத்துள்ளதாகவும் புதுச்சேரி மாநில முதல்வராவதே அவரது திட்டம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய்யை அவரது வீட்டிலேயே சந்தித்ததும் இந்த தகவல் கசிந்து வருவதற்கும் ஒற்றுமை படுத்தி பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் விஜய் ஒரு சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தமிழகத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேறு எந்த கட்சியுடனும் அரசியல் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடவே இப்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் நிலமையை அனுசரித்து அந்த நேரத்தில் ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று உறுதிபட கூறி விட்டதை அடுத்து கமல்ஹாசனுக்கு பின்னர் அரசியலுக்கு வரும் பெரிய நடிகர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.