தமிழ் திரையுலகில் இதுவரை விஜய்க்கும் விஜய் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை போல் வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்குமா? என்பது சந்தேகமே. கிட்டத்தட்ட அவரது ஒவ்வொரு படமும் பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மாஸ்டர் படத்திற்கும் தற்போது பிரச்சனை ஏற்பட ஆரம்பித்துள்ளது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து விஜய்யை அழைத்துச் செல்வது படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாஜகவினர் போராட்டம் செய்வது போன்ற வேலைகள் ஆரம்பமாகி விட்டது
ஆனால் இதையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் வெளியே வந்த விஜய் ரசிகர்களை நோக்கி ஒரு புன்சிரிப்புடன் கையசைத்தது ’எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவர் தனது ரசிகர்களை பார்த்து விட்டால் எல்லாவற்றையும் மறந்து விடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று அசால்டாக அவர் ரசிகர்களும் கையசைத்தது ’எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா’ என்ற அவரது படத்தின் வசனம் தான் ஞாபகம்