தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் பெயர் வெளியானதிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கேப்டன் மில்லர் திரைக்கு 2024ல் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இறுதி சுற்று படத்தில் வசனம் எழுதியிருக்கிறார். ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார்.
ராக்கி படத்திற்கு பிறகு தனுஷிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் அருண். இந்தப்படத்திற்கு தனுஷ் தான் பொருத்தமாக இருப்பார் என்பதை உறுதி செய்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன். இருந்தாலும், கதை தயாரானதும், முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இருப்பினும் தனுஷ் தான் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு பொருத்தமானவர் என்று முடிவு செய்திருக்கிறார். சாணிக்காகிதம் வெற்றி பெற விட்டாலும், மேக்கிங் ஸ்டைல் பெரிதாக பேசப்பட்டது.
ராக்கியும் அப்படியான வெற்றியைத்தான் பெற்றது. ஆக்ஷன் காட்சிகளை திறம்பட கோர்வையாக்கி காண்பிக்கும் திறன் அருண் மாதேஸ்வரனிடம் இருப்பதால், தனுஷிற்கு கேப்டன் மில்லர் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
கேப்டன் மில்லரின் கதை 1930ல் சாதாரண இளைஞன் போராளியாக மாறுவதுதன் கதை. ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். இதனை திறம்பட இயக்கும் திறனை அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்கள் மூலம் உறுதி செய்து கொண்டார் தனுஷ்.கேப்டன் மில்லர் முடிந்ததும் மீண்டும் தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார் அருண் மாதேஸ்வரன். இந்த படத்தின் கதை கேப்டன் மில்லரோடு தொடர்புடையதல்லை என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
அதோடு கேப்டன் மில்லரின் அடுத்த பாகம் எடுப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதால் அதுவும் வருங்காலத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவிற்கும் கதை சொல்லி இருப்பதாகவும், தனுஷின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அந்த படத்திற்கான வேலைகள் தடைபட்டு வருவதாக தெரிகிறது.
காலம் தான் கை கொடுத்து இந்தப்படங்களை எல்லாம் சாத்தியப்படுத்த வேண்டுமென்று அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். தான் இயக்கிய மூன்று படங்களிலுமே இயக்குனர்களான பாரதிராஜா, செல்வராகவன் மற்றும் தனுஷ் இவர்களுடன் பணியாற்றியது பெரும் அனுபவமாக இருந்ததாக கூறியுள்ளார்.