இது எனக்கான படம் இல்ல.. ரஜினிக்கான படம்! இருந்தாலும் துணிந்து நடித்த விஜய்.. ரிசல்ட் என்ன தெரியுமா?

கோலிவுட்டில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி மற்றும் சினேகா ஆகியோர்கள்…

Rajini and Vijay

கோலிவுட்டில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி மற்றும் சினேகா ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா ,அஜ்மல் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக விஜய் ஒரு ஆக்சன் ஹீரோவாக கோலிவுட்டில் திகழ்ந்து வருகிறார்.

ஆரம்ப காலங்களில் அவருடைய படங்களை எடுத்துக் கொண்டால் குடும்ப பங்கான கதைகளிலேயே நடித்து குடும்ப ஆடியன்ஸை மட்டுமே தன் பக்கம் வைத்திருந்தார் விஜய். இப்போது முழுவதுமாக ஆக்சன் படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து இருக்கிறார்.

அந்த வகையில் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக பிரதிபலித்த திரைப்படம் எது என்றால் அது பகவதி திரைப்படம் தான். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் கதையை முதலில் விஜயிடம் சொன்னபோது அதில் நிறைய பஞ்ச் வசனங்கள் இருந்ததாகவும் ஸ்டைலான சில காட்சிகளில் நடிக்க வேண்டியதாக இருந்ததாகவும் அதனால் இது ரஜினிக்கு தான் பொருத்தமாக இருக்கும். எனக்கு செட்டாகாது என விஜய் வெங்கடேஷிடம் சொல்லி இருக்கிறார்.

அதற்கு வெங்கடேஷ் ‘இந்த படத்தை எழுதும்போது ரஜினி சாரை வைத்து தான் எழுதினேன். ஆனால் உங்களுக்கு இந்த படம் ஒரு நல்ல திருப்புமுனையாக இருக்கும். ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் ஒரே படத்தில் மாறிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற முடியும். அதற்கான ஸ்டெப்புகளை நாம தான் எடுக்க வேண்டும். அதற்கு இந்த படம் உங்களுக்கு ஒரு நல்ல பிளாட்பார்மாக அமையும். அதனால் துணிந்து நடிங்கள்’ என வெங்கடேஷ் கூறினாராம்.

அதன் பிறகு தான் பகவதி திரைப்படத்தில் விஜய் நடிக்க அந்தப் படம் பெரிய அளவில் அவருக்கு பெயரை பெற்று கொடுத்தது.