தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்பொழுது அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நானும் ரவுடிதான் திரைப்படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா மற்றும் ஹீரோயின் ஆக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் நயன்தாரா சமந்தா என இரு முன்னணி ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. லைக்கா தயாரிப்பில் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால் அந்த படத்தின் கதைக்களம் நடிகர் அஜித்திற்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் அந்த படம் கைவிடப்பட்டது.
அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்க நாதனை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் மிஷ்கின் என முக்கிய பிரபல நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க உள்ளாரா என்பது குறித்த விரிவான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் இந்தத் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பதிலாக 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்க உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்திற்கு முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக உள்ளதாக தகவல் வைரலாக பரவியது. லைக்கா புரொடக்சன் தயாரிக்க இருந்த இந்த திரைப்படமும் கைவிடப்பட்டது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருந்த அந்த திரைப்படத்திற்கு எல்ஐசி என டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. எல்ஐசி என்பது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என தலைப்பிட முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த திரைப்படம் லவ் மற்றும் மொபைல் டெக்னாலஜியை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருந்தது.
தல அஜித்திற்காக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் உருவாக்கிய 4 திரைப்படங்கள்?
தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனுக்காக தயார் செய்யப்பட்ட கதையில் தான் நடிகர் மற்றும் இயக்குனர் ஆன பிரதிப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக தான் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் நடிகர் என்பதை நிரூபித்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நடிகர் பிரதீப்பின் முதல் திரைப்படம் ஆன லவ் டுடே திரைப்படமும் காதல் மற்றும் மொபைல் மையமாக வைத்து உருவான கதை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்த திரைப்படமும் அதே கதைக்களத்தை மையமாக வைத்து படமாக்கப்பட உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகாத பட்சத்தில் அடுத்தடுத்த அப்டேட் சில நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.